2nd day bus strike in puducherry

ஊதியம் வழங்கக்கோரி புதுச்சேரியில் 2வது நாளாக உள்ளூர் நகர பேருந்துகளை இயக்காமல் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணிமனை தொழிலாளர்கள், ஊழியர்கள் என 650–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 200 க்கும் மேற்பட்டோர் ஒப்பந்தித் தொழிலாளர்கள்.

கடந்த 5 மாதங்களாக நிதி பற்றாக்குறையால் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை. அவ்வப்போது நிரந்தர ஊழியர்கள் சிலருக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடிக்கடி போக்வரத்து தெரிழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த மாதம் 18 தேதி ஆகியும் சம்பளம் வழங்காத நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.*

இந்த நிலையில் ஊதியம் வழங்க கோரி இன்று 2வது நாளாக 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

இந்த வேலை நிறுத்தத்தினால் புதுச்சேரி, காரைக்காலில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதே போன்று புதுச்சேரியில் இருந்து திருப்பதி, சென்னை, பெங்களூரு செல்லும் பேருந்துகளு ம் இயக்கப்படவில்லை. போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.