Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவுடன் மல்லுக்கட்ட தயாரான முதல்வர் எடப்பாடி... அதிரடி அறிவிப்பு வெளியீடு..!

கொரோனா தடுப்பு பணி - ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

2570 contract nurses appointed...Edappadi Palanisamy order
Author
Tamil Nadu, First Published May 8, 2020, 1:44 PM IST

கொரோனா தடுப்பு பணி - ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

தமிழக அரசை பொறுத்த வரையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதில், ஒரு அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலமாக ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நிபுணர்கள் மற்றும் 2215 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

2570 contract nurses appointed...Edappadi Palanisamy order

இதனை தொடர்ந்து 6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த செவிலியர்களுக்கு ஆணை கிடைக்கப்பெற்ற 3 நாட்களில் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதேபோல, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுக்காக மருத்துவமனைகளுக்கு தேவைகேற்ப 10 முதல் 30 செவிலியர்களை பணியமர்த்தப்படுவர்.

2570 contract nurses appointed...Edappadi Palanisamy order

இதன் மூலமாக கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் எனவும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து பணி நீட்டிக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில், புதியதாக ஒப்பந்தம் அடிப்படையில்  2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதா கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios