Asianet News TamilAsianet News Tamil

இலங்கையில் தவிக்கும் 2400 இந்தியர்கள்... மீட்பு நடவடிக்கையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு

இந்த நிலையில் இலங்கையில் 2400 இந்தியர்கள் சொந்த ஊருக்கு வரமுடியாமல் ரெம்பவே சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.ஐரோப்பிய நாடுகளில் இருக்கு இந்தியர்களையெல்லாம் மீட்டு வரும் இந்திய அரசு பக்கத்து நாடான இலங்கையில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்டுவருவதில் ஆர்வம் காட்டாமல் அலட்சியம் காட்டி வருவது ஏன்? என்று புரியவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

2400 Indians stranded in Sri Lanka ...
Author
India, First Published May 19, 2020, 6:29 PM IST

அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுலா மருத்துவ சிகிச்சை வியாபாரம் என பல்வேறு விசயங்களுக்காக சென்றவர்கள் கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி உலக நாடுகள் முழுவதும் பொது போக்குவரத்து விமானப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்தது. இதனால் பல்வேறு வெளிநாடுகளில் உள்ளவர்களை இந்தியா "வந்தே பாரத் மிஷன்" என்ற திட்டத்தை தொடங்கி மீட்டு வருவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

2400 Indians stranded in Sri Lanka ...

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதில் மத்திய அரசு உதவி செய்து வருகிறது. புலம் பெயர் தொழிலாளர்கள் உள்நாட்டில் அகதிகளாக சொந்த மாநிலம் செல்ல முடியாமல் தவிப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கையில் 2400 இந்தியர்கள் சொந்த ஊருக்கு வரமுடியாமல் ரெம்பவே சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.ஐரோப்பிய நாடுகளில் இருக்கு இந்தியர்களையெல்லாம் மீட்டு வரும் இந்திய அரசு பக்கத்து நாடான இலங்கையில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்டுவருவதில் ஆர்வம் காட்டாமல் அலட்சியம் காட்டி வருவது ஏன்? என்று புரியவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

2400 Indians stranded in Sri Lanka ...
இரண்டு மாதங்களாகியும் இதுவரைக்கும் இலங்கையில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் அங்கே சாப்பாட்டுக்கே ரெம்பவே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்களாம். கையில் இருக்கும் பணம் சாப்பாட்டுக்கே போதுமானதாக இல்லை என்றும் பிள்ளைகளை பிரிந்து இருக்கும் பெற்றோர்கள் என நிறைய பேர் இலங்கையில் சிக்கி தவிக்கிறார்கள் அவர்களை இந்தியா அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 
கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து முதற்கட்டமாக அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியதுடன், விமான சேவையையும் ரத்து செய்தன. இதனால் வெளிநாடுகளுக்கு மருத்துவம் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவ்வாறு அங்கு சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்காக பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவும் ‘வந்தே பாரத் மிஷன்’ என்ற திட்டத்தை தொடங்கி பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அண்டை நாடான இலங்கையில் சிக்கித் தவிக்கும் 2,400-க்கும் அதிகமான இந்தியவர்களை மீட்பதற்காக இதுவரை சிறப்பு விமானங்கள் எதுவும் இயக்கப்படாததால், அவர்கள் அங்கு 2 மாதங்களாக சிக்கித்தவித்து வருகின்றனர்.

2400 Indians stranded in Sri Lanka ...

இந்த நிலையில் நொய்டாவை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினிதா கூறுகையில், நான் கொழுப்பு நகரில் உள்ளேன். கையில் இருக்கும் பணத்தை கொண்டு, ஒவ்வொரு நாளும் எனது பிழைப்புக்காக நான் போராடி வருகிறேன் என்றார். தனது மனைவியுடன் சுற்றுலா சென்ற விஜய் பால் சிங் என்பவர் கூறுகையில், பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில், விடுமுறையை கழிப்பதற்காக குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு நானும், எனது மனைவியும் இங்கு வந்தோம். நான்கு நாள் சுற்றுலாவுக்காக இங்கு வந்த நாங்கள் 2 மாதங்களாக சிக்கித் தவிக்கிறோம் என்றார். இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் அங்கு சென்ற சதேந்திர மிஸ்ரா கூறுகையில், நாங்கள் ஒரு குழுவாக இங்கு இருக்கிறோம். இதுவரை இலங்கையில் இருந்து எங்களை வெளியேற்றுவதற்கான எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios