கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள 3கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கட்டது. அந்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி 4ம் கட்ட ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் என்று மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

இதுவரைக்கும் பிபிஇ கவச உடைகளை இந்தியா தயாரித்தது இல்லை இன்றைக்கு 2லட்சம் உடைகளை தயாரிக்கிறது. எண்9 முக கவசம் மட்டும் ஒரு நாளைக்கு 2லட்சம் தயாரித்து வருகின்றது. இந்தியா பல்வேறு முறைகளில் முன்னேற்றம் காணுகிறது. இதுபோன்ற மோசமான நிலையை இந்தியா சந்தித்தது இல்லை. மக்கள் வாழ்க்கையை வாழ்வா? சாவா? என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மாற்றங்களை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.நாமும் உலகத்தை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறோம்.இந்தியாவின் மாற்றங்கள் உலகையே மாற்றி அமைக்கும்.
 பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி மூலம் 20லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கப்படுகிறது.இது உள்நாட்டு உற்பத்தியில் 10சதவிகிதம்.இதன் மூலம் அறிவிக்கப்படும் திட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் மோடி. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் மம்தா:
பிரதமர் அறிவித்த 20லட்சம் கோடி முழுமையற்றது ஏமாற்றம் அளிக்ககூடியது. அரசின் சாதனைகளை சுய பெருமை பேசுகிறார். மே17க்கு பிறகு எந்த மாதிரியான ஊரடங்கு இருக்கும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.அவரின் அறிவிப்பு ஏமாற்றம் தந்தது. 4.0 பற்றி பேசினார் அதன் அமைப்பு என்னமாதிரி இருக்கும் என்று குறிப்பிடப்படவில்லை.

எம்.பி ரவிக்குமார் விடுதலை சிறுத்தை கட்சி:

ஊரடங்கின் 4 ஆவது கட்டம் வித்தியாசமானதாக இருக்கும் என பிரதமர் கூறியிருக்கிறார்.அது வேறு ஒன்றுமல்ல, ஊரடங்கே இல்லாத ஊரடங்கு என்பதாக அது இருக்கும்வார்த்தைகளை சாப்பிட்டு பசியாறலாம் என்ற வசதி மட்டும் இருந்திருந்தால் நமது பிரதமர் பசி பட்டினியை எப்போதோ ஒழிந்திருப்பார்.20 லட்சம் கோடி என்பதில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்த 4.5 லட்சம் கோடி திட்டமும் அடங்கும் என்கிறார் பிரதமர்.நாளை நிதி அமைச்சர் அறிவிக்கும்போது அதில் எதெதெல்லாம் உள்ளடங்கப் போகிறதோ தெரியவில்லை.நமது நிதி அமைச்சர் மார்ச் 26 ஆம் தேதி அறிவித்த 1.76 லட்சம் கோடி நிவாரணம் போலத்தான் இந்த 20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பும் இருக்குமோ என அச்சமாக இருக்கிறது.

 

 

 

எம்பி தொல்.திருமாவளவன் தலைவர் விசிக:
பிரதமர்மோடி சொற்சிலம்பம் ஆடுவதில் சூரப்புலி. ரூ20இலட்சம்கோடி திட்டம். மயக்குமொழி பேசுவதில் மோடிக்குநிகர் மோடிதான். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியோ, உடனடிநிவாரணம் பற்றியோ, புலம்பெயர் தொழிலாளர் பற்றியோ ஏதுமில்லை. தற்போதைக்கு ஒன்றுமில்லை.கொரோனா தடுப்பும் பொருளாதார மீட்பும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியவை. ஆனால், பிரதமர் இந்தியாவுக்கான' கனவுத்திட்டத்தையே அறிவித்துள்ளார். தற்போது மரணநோயின் பீதியிலிருந்தும் பட்டினிச்சாவிலிருந்தும் மீள்வதற்கு ஒருவழியும் சொல்லவில்லை. வழக்கமான ஏமாற்றம்.