Asianet News TamilAsianet News Tamil

இருபது தொகுதியிலும் தி.மு.க.வை ஜெயிக்க வைப்போம்! தினகரனின் தெறி பிளான்... தடுமாறும் எடப்பாடி!!!

18 பேருடன் இல்லாமல் செந்தில்பாலாஜி, பழனியப்பன் மற்றும் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோருடன் இன்னும் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு தினகரன் சில சீரியஸ் டிஸ்கஸன்களை நடத்தியிருக்கிறார். அதைப்பற்றி கசியும் தகவல்கள் அனைத்தும், இந்த ஆட்சியை கலைத்தே தீரும் நோக்கில் தினகரன் வெறித்தனமாக துடித்துக் கொண்டிருப்பதை காட்டுவதாகவே உள்ளன.

20 By-Election Constituency... DMK will win...TTV Master plan
Author
Chennai, First Published Oct 30, 2018, 5:10 PM IST

மதுரையில் டி.டி.வி. தினகரன் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த கூட்டம் பற்றி வெளியே வந்த தகவல்கள் சாதாரணமானவைதான். ஆனால் உண்மையில் அந்த கூட்டத்தில் அலசப்பட்ட பிளான்கள் அசாதாரணமானவை! என்கிறார்கள். 20 By-Election Constituency... DMK will win...TTV Master plan

அதாவது 18 பேருடன் இல்லாமல் செந்தில்பாலாஜி, பழனியப்பன் மற்றும் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோருடன் இன்னும் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு தினகரன் சில சீரியஸ் டிஸ்கஸன்களை நடத்தியிருக்கிறார். அதைப்பற்றி கசியும் தகவல்கள் அனைத்தும், இந்த ஆட்சியை கலைத்தே தீரும் நோக்கில் தினகரன் வெறித்தனமாக துடித்துக் கொண்டிருப்பதை காட்டுவதாகவே உள்ளன. தினகரன் டிஸ்கஸனின் ஹைலைட்ஸ் இதோ...

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல் நம்மால் இந்த இருபதிலும் ஜெயிப்பது, அல்லது இருபதில் கணிசமானவற்றில் ஜெயிப்பது என்பது மிக கடினம். காரணம், ஆர்.கே.நகரில் தோற்பதால் மானம் தான் போனது ஆனால் இதில் தோற்றால் ஆட்சியே போய்விடுமென்பது எடப்பாடி மற்றும் பன்னீருக்கு தெரியும். எனவே நாம் கூலாக இருக்க கூடாது.

* இருபது தொகுதி மக்களும் நம்மை ஜெயிக்க வைக்காவிட்டாலும் கூட நமக்கு மிக கெளரவமான வாக்குகளை நிச்சயம் கொடுப்பார்கள். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி நிச்சயம் பெரிதாய் பிரிந்து அவர்களுக்கு சேதாரம் நிகழும். 

* ஜெயிக்காமல் வெறுமனே வாக்குகளை மட்டும் கை நிறைய வாங்கி வைப்பதில் நமக்கு எந்த லாபமுமில்லை. நம்முடைய இலக்கு கட்சி மற்றும் சின்னத்தை மீட்பதுதான். எனவே அ.தி.மு.க. தோற்று, ஆட்சி கலைந்தால் தானாக அது ரெண்டும் நம்மிடம் வந்துவிடும்.

* அதனால் தி.மு.க. ஜெயிப்பதற்கு வழி தந்துவிட்டு அ.தி.மு.க.வை ஒரு ஓரத்தில் அடித்து நகர்த்தி உட்கார வைத்துவிட வேண்டும். தி.மு.க. நமக்கு எதிரிதான், ஆனால் இவர்கள் துரோகிகள். இடைத்தேர்தல்களில் இவர்களை ஜெயிக்க விட்டால் பின் ஐந்தாண்டுகாலம் முடியும் வரையில் நம்மை கசக்கிப் பிழிந்து காலி செய்யவே நினைப்பார்கள்.

* சின்னம்மா சிறை மீண்டு வருகையில் மொத்த அ.தி.மு.க.வையும் அவர் கையில் சிரமமில்லாமல் கொடுக்க வேண்டும். வெளியே வந்த பின்னும் அவர் எடப்பாடி, பன்னீரை எதிர்த்து போராடும் நிலை வரக்கூடாது.

* இப்போது தி.மு.க.வை ஆளவிட்டு பிறகு அடித்து ஓரங்கட்டி விடலாம் அதில் சிரமம் இருக்காது. ஆனால், சின்னம்மா தண்டனை முடிந்து வெளியே வருகையில் அவருக்கு எதிராக, நிகராக பன்னீரும் பழனிசாமியும் அரசியலில் இருக்கக்கூடாது. ஒன்று முன்பு போல் சின்னம்மாவுக்கு பணிந்து நிற்க வேண்டும் அல்லது அரசியலை விட்டே நகர்ந்து இருக்க வேண்டும். இதுதான் டார்கெட்! இதன் உள்ளே நுழைந்து நெளிவு சுளிவுகளை ஆராய்ந்து ஒரு முடிவெடுப்போம்.” என்றிருக்கிறார். 20 By-Election Constituency... DMK will win...TTV Master plan

தினகரனின் வார்த்தைகளை கேட்டு துவக்கத்தில் மற்றவர்கள் அதிர்ந்தாலும் அதன் பின், அதில் உள்ள நியாயத்தை புரிந்து தலையாட்டி இருக்கிறார்கள். இந்த தகவல்களை அப்படியே ஸ்மெல் செய்து முதல்வர் எடப்பாடியிடம் ஒப்புவித்திருக்கிறது உளவுத்துறை. அதிர்ந்தாலும், பிறகு சுதாரித்து இவர்களின் திட்டத்துக்கு செக் வைக்கும் வகையில் அடுத்தக்கட்ட பிளான்களை அவர் நகர்த்த துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

இடைத்தேர்தலை பொறுத்தவரையில் ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் ஒரு எதிரிதான் அது அ.தி.மு.க. ஆனால் எடப்பாடியாருக்கோ இரண்டு எதிரிகள். எப்படி சமாளிக்கப்போகிறார்? அல்லது இடைத்தேர்தலை அப்படியே இழுத்துக் கொண்டே போய்விடுவார்களா?
 என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!

Follow Us:
Download App:
  • android
  • ios