Asianet News TamilAsianet News Tamil

புனேவில் இருந்து 2 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை வருகை.. மத்திய அரசு அதிரடி..

புனேவில் இருந்து இரண்டு லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.  

2 lakh corona vaccines arrive in Chennai from Pune .. Central Government Action ..
Author
Chennai, First Published Apr 23, 2021, 1:59 PM IST

புனேவில் இருந்து இரண்டு லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

2 lakh corona vaccines arrive in Chennai from Pune .. Central Government Action ..

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  இன்று பூனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சுமார் இரண்டு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.  

2 lakh corona vaccines arrive in Chennai from Pune .. Central Government Action ..

இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு மருந்துகள் வைக்கப்பட உள்ளது. பின்னர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 20 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்ட நிலையில் ஒரு லட்சம் கோவேக்சின், 6 லட்சம் கோவிஷீல்டு மருந்துங்கள் மத்திய அரசு ஏற்கனவே  வழங்கி உள்ளது, தற்போது இரண்டு லட்சம் தடுப்பூசிகள் சென்னை கொண்டுவரப்படுள்ளது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios