Asianet News TamilAsianet News Tamil

ரூ.85 கோடி மதிப்புள்ள 2.38 லட்சம் டன் நிலக்கரி எங்கே? யார் தவறு செய்தாலும் நடவடிக்கை.. செந்தில் பாலாஜி.!

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இந்த மின்துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் தெரியவரும்போது உள்ளபடியே கடந்த அதிமுக ஆட்சியை நினைத்து வருத்தப்படுவதா? அல்லது அந்த நிர்வாக திறமையைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

2.38 lakh tonnes of coal worth Rs 85 crore is missing... minister Senthil Balaji
Author
Chennai, First Published Aug 20, 2021, 2:56 PM IST

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதற்கும், பதிவேட்டில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-   நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதிற்கும் இருப்பில் உள்ளதிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. 

2.38 lakh tonnes of coal worth Rs 85 crore is missing... minister Senthil Balaji

அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும்.  நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்தத் தவறில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இந்த மின்துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் தெரியவரும்போது உள்ளபடியே கடந்த அதிமுக ஆட்சியை நினைத்து வருத்தப்படுவதா? அல்லது அந்த நிர்வாக திறமையைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

2.38 lakh tonnes of coal worth Rs 85 crore is missing... minister Senthil Balaji

அந்த அளவிற்கு ஒரு மோசமான நிர்வாகம் செயல்பட்டிருக்கிறது. வடசென்னை அனல்மின் நிலையம் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ந்து 100 நாட்களை கடந்து இயங்கி மின் உற்பத்தியில்  சாதனை படைத்துள்ளது. இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை. கூடுதல் வைப்புத்தொகை விவகாரத்தில் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios