இறந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர்  அதிமுக கட்சி இரண்டாக பிரிந்தது அதன் பின் அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல குழப்பங்களும், திருப்பங்களும்  அரங்கேறியது.

பின்னர் வெகு நாளாக இரு அணிகளின் இணைப்புகான பேச்சுவார்த்தை நடந்தது கடந்த சில தினங்களாக அந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது இந்நிலையில் இன்று நடைப்பெற்ற நீண்ட நேர ஆலோசணைக்கு பிறகு அதிமுகவின் இரு அணியினரும் கட்சி  தலைமை அலுவலகத்தில் இணைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து இன்னும் டி,டி,வி,தினகரனின் ஆதரவு  எம்எல்ஏக்கள் 18 பேர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டனர்.