18 mla dismiss case trail wil come in chennai high court

டி.டி.வி.தினகரன் ஆதரவு, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, புதிய நீதிபதி ரவிச்சந்திர பாபு முன், இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் புதிய மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டால் இறுதி விசாரணை தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தசரா விடுமுறைக்கு முன், நீதிபதி துரைசாமி விசாரித்த வழக்குகள், தற்போது, நீதிபதி ரவிச்சந்திரபாபுவுக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே, டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பு வழக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஆகியவை நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கில் சபாநாயகர், சட்டசபை செயலர், கவர்னர் செயலர் தரப்பில், பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போதுதான் , யார் யார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்ற, விபரங்கள் தெரிய வரும்.

இவ்வழக்கில், இரு தரப்பிலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே, வைத்தியநாதன், அரிமா சுந்தரம் உள்ளிட்டோர் வாதாட உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் கட்டமாக, இன்று விசாரணையை துவங்யகிய பின், மூத்த வழக்கறிஞர்களின் வசதியைப் பொறுத்து, இறுதி கட்ட விசாரணைக்கு, தேதி குறிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.