Asianet News TamilAsianet News Tamil

கிஷ்கிந்தா அபகரித்துள்ள 177 ஏக்கர் நிலம்... மீட்க ஸ்கெட்ச் போடும் அமைச்சர் சேகர்பாபு..!

கிஷ்கிந்தா வசமுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை மீட்க சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

177 acres of land confiscated by Kishkinda ... Minister Sekarbapu to sketch to recover
Author
Tamil Nadu, First Published Sep 23, 2021, 4:38 PM IST

கிஷ்கிந்தா வசமுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை மீட்க சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 177 acres of land confiscated by Kishkinda ... Minister Sekarbapu to sketch to recover

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது, கிஷ்கிந்தா வசமுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை மீட்க சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘’தாம்பரம் அருகேயுள்ள கேளிக்கை பூங்காவான கிஷ்கிந்தா வசமுள்ள இடம் ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் மூலம் உருவான நிலம். சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி அது கோவில் நிலம் தான் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.177 acres of land confiscated by Kishkinda ... Minister Sekarbapu to sketch to recover
 
இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்படும். பயன்பாட்டில் இல்லாத நகைகள் மத்திய அரசு ஒப்புதலோடு தங்க பிஸ்கட்டுகளாக மாற்றப்படும். வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி தொகையில் கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்’’என்று அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios