கடலூரில் தலித் சிறுமி ஒருவர்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே  மரத்தூர் சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது தலித் சிறுமி. . 10 வகுப்பு படித்து முடித்துள்ள இவர் புவனகிரியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் கடையில் விற்பனை பெண்ணாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. 

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், பல இடங்களில் தேடியுள்ளனர். இதில், மரத்தூர் சாவடிக்கு அருகில் இன்று காலை முகம் முழுவதும் ரத்தக் காயங்களுடனும், கிழிந்த ஆடையுடனும் பிணமாக மீட்கபட்டுள்ளார்.

இதையடுத்து அவரது பெறோர் மற்றும் உறவினர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விழுப்புரம் முண்டியப்பாக்கம் அரசு மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், தங்களது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அப்பெண்ணின் பெற்றோர் போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.