சென்னையில் இருந்து பிற மாநிலங்களைச் சார்ந்த சுமார் 16 ஆயிரம் தொழிலாளர்கள் எந்த வைரஸ்  தொற்றுமின்றி  பாதுகாப்புடன் அவர்களின் சொந்த  மாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .  சென்னை கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  அவர்களும் இன்று ராயபுரம் மண்டலம் பகுதி 12-வார்டு 62 அஞ்சநெய நகர் பழைய  ஆட்டுத் தொட்டி சாலையில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு மறு பயன்பாட்டுடன் கூடிய முக கவசங்களை வழங்கினார்கள் .

  

பின்னர் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தனர்,  அப்போது பேசிய ராதாகிருஷ்ணன் , தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைவாழ் பகுதிகளில் உள்ள 26 லட்சம் மக்களுக்கு ஒருவருக்கு மூன்று கவசங்கள் என 50 லட்சம் முகக் கவசங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது   மாநகராட்சி சார்பில் அதிக வைரஸ் தொற்று  பாதித்த ராயபுரம் மண்டலத்தில் கடந்த 8 நாட்களாக இதுவரை எந்த வித வைரஸ் தொற்றும் ஏற்பட வில்லை .   மக்கள் அடர்த்தியாக வசிக்கும் 650 குடிசை பகுதிகளோடு மொத்தம் 2,000 பகுதிகள் கண்டறியப்பட்டு  அந்தப் பகுதிகளில் பொதுமக்களிடையே முகக் கவசம் அணிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மாநகராட்சியின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கையின் காரணமாக வைரஸ் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் ஒத்துழைப்போடு வைரஸ் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 120க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த 14 நாட்களாக இதுவரை எவ்வித வைரஸ் தொற்றும் ஏற்படாததால் அவ்விடங்கள்  இன்று முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து விற்கப்படுகின்றன என கூறியுள்ளார். 

இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக அளவிற்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன ,  இதில் சென்னையில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .  சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பாதுகாப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் இதுவரை 1071 நபர்கள் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி ஆகும் .  தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக பிற மாநிலங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து  626 தொழிலாளர்கள் வைரஸ் தொற்று ஏதுமின்றி பாதுகாப்பாக தங்கள் மாநிலங்களுக்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .  இதில் 10 ஆயிரத்து 38 நபர்கள் ஒடிசா மாநிலத்திற்கும்,  1081 நபர்கள் மணிப்பூர் மாநிலத்திற்கும் ,  881 நபர்கள் ஆந்திர மாநிலத்திற்கும்,   3834 நபர்கள் ஜார்கண்ட் மாநிலத்திற்கும், 1412 நபர்கள் மிசோரம் மாநிலத்திற்கும் ,  2332 நபர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கும் ,  1284 நபர்கள் அசாம் மாநிலத்திற்கும் ,3764 நபர்கள் பீகார்  மாநிலத்திற்கும் பல்வேறு நாட்களில் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார் .