Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வை கைவிடுங்க... அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களின் முழு விவரம்..!

சென்னையில் நடந்தது வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அயராது உழைத்த ஓபிஎஸ்-இபிஸ் மற்றும் அமைச்சர்களுக்கு செயற்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

15 resolutions passed in the AIADMK Executive Committee meeting
Author
Chennai, First Published Sep 28, 2020, 11:41 AM IST


சென்னையில் நடந்தது வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அயராது உழைத்த ஓபிஎஸ்-இபிஸ் மற்றும் அமைச்சர்களுக்கு செயற்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீர்மானங்கள் விவரம்;-

* கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

* மேகாதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மத்திய அரசு நீட் தேர்வு முறையை கைவிடுமாறு வலியுறுத்தி வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நீட் விவகாரத்தில் திமுக சுயலாபத்திற்காக நாடகமாடுவதாகக் கூறி கண்டனம் தீர்மானம் 

* கலாசார பண்பாட்டு மறு ஆய்வுக் குழுவில் தமிழக அறிஞர்களுக்கு இடமளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

* காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க ஒன்றுபட்ட சிந்தனையோடு ஒற்றுமையாக உழைக்க சூளுரைக்கப்பட்டுள்ளது.

* பொருளாதாரத்தை மீட்டெடுக்க குழு அமைத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைத்ததற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* கட்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த கோரிக்கை வைக்கப்பப்பட்டுள்ளது.

* கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்கள் அமைத்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றியமைக்கமு் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios