7 பேர் விடுதலையில் திமுகவுக்கு அக்கறையில்லை, அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஆன்லைன் ரம்மி விளையாட்டை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதால் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

7 பேர் விடுதலைக்காக குரல் கொடுத்து உண்மையான அக்கறையுடன் தீர்மானம் நிறைவேற்றினோம். 7 பேர் விடுதலையில் திமுகவுக்கு அக்கறையில்லை, அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான்.  7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டியுள்ளது. விஜய் கட்சி தொடங்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கையில் இந்தியாவில் கட்சி தொடங்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. 144 தடை உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது எனவும் விளக்கமளித்துள்ளார். 

மேலும், நீலகிரி, திருப்பூரில் கொரோனா பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.  கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன என கூறியுள்ளார்.