Asianet News TamilAsianet News Tamil

135-18=117! தாக்குப் பிடிக்குமா! பழனிச்சாமி அரசு? திக்கற்று நிற்கும் தினகரன்..!

Edappadi palanisamy government will be dissolved
135-18=117 edappadi palanisamy government will be dissolved
Author
First Published Sep 18, 2017, 11:58 AM IST


முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பொறுப்பு ஆளுநரிடம் புகார் அளித்ததற்காக 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் தனபால்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் 136 உறுப்பினர்கள் இதில் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மறைந்துவிட்டார். மீதமிருக்கும் 135 . 233 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழகத்தில் 118 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்தால் ஆட்சி அமைக்கலாம்.

தற்போது அதிமுகவில் இருக்கும் 135 எம்.எல்.ஏக்களில் 18 பேர் பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுவிட்டனர். அந்த வகையில், தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது பழனிச்சாமிக்கு பாதகமாக முடியும்.

எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிட்டால், சட்டமன்றத்தில் இருக்கும் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 216. சட்டமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பது எளிது என்பதால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இருக்கும் எம்.எல்.ஏக்களில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்தால்கூட மிகவும் அசிங்கமானது. ஏனென்றால், திமுக ஆட்சியிலிருக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை மைனாரிட்டி திமுக அரசு, மைனாரிட்டி திமுக அரசு என கூறிய ஜெயலலிதா சார்ந்த கட்சியே மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் நிலை உருவாகும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios