Asianet News TamilAsianet News Tamil

இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு.. அமைச்சர் மூர்த்தி தகவல்..!

போலி பத்திரம் எழுதும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.  2 மாத காலமாக பத்திரப்பதிவுத்துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. கால் சென்டரில் இதுவரை 5 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதில், நியாயமான சுமார் 2500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

134 crore in one day Registration .. Minister Moorthy information
Author
Chennai, First Published Jul 27, 2021, 5:08 PM IST

கடந்த காலங்களில் தவறான போலி பத்திரப்பதிவுகள் மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது என்றும் அது தொடர்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் மாவட்ட பத்திரப்பதிவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு முதன்மை செயலாளர் ஜோதி நிர்மலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

134 crore in one day Registration .. Minister Moorthy information

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி;- போலி பத்திரம் எழுதும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.  2 மாத காலமாக பத்திரப்பதிவுத்துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. கால் சென்டரில் இதுவரை 5 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதில், நியாயமான சுமார் 2500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு நடைபெற்றுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

134 crore in one day Registration .. Minister Moorthy information

மேலும், ஜிஎஸ்டி நிலுவைத்தொகை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மிக விரைவில் மத்திய அரசு நிலுவைத்தொகையை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியதை 10 % கூட நிறைவேற்றியிருக்க மாட்டார்கள். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக சொல்லாததையும் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி வருகின்றனர் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios