ஈரோடு இடைத்தேர்தல்..! ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் எத்தனை பேர்.? நோட்டா பிடித்த இடம் எது.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரை தவிர மற்ற வாக்காளர்கள் அணைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். 13 வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை வாங்கியுள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ்,அதிமுக,தேமுதிக,நாம் தமிழர் உள்ளிட்ட 77 பேர் வேட்பாளராக களத்தில் இறங்கி இருந்தனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்தத் தேர்தலில் மொத்தமாக 77 பேர் வேட்பாளராக களம் இறங்கிய நிலையில் அதில் 13 பேர் பத்து வாக்குகளை கூட பெறாமல் ஒற்றை இலக்கத்திலேயே வாக்குகளை பெற்றுள்ளனர். யாருக்கும் வாக்கு இல்லை என்று பதிவு செய்யும் வகையில் நோட்டாவிற்கு 798 வாக்குகள் பதிவாகி இருந்தது.
அதிமுக எதிர்கொண்ட கடைசி 8 தேர்தல்கள்..! எடப்பாடி பழனிசாமியால் கட்சிக்கு வீழ்ச்சியா.? வளர்ச்சியா.?
ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள்
குறிப்பாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் அதிகபட்சமாக ஒன்பது வாக்குகளை பெற்றிருந்தார். இதனைடுத்து எஸ்.பி.ராம்குமார் (சுயேட்சை) -8 வாக்குகள், கு.புருசோத்தமன் (சுயேட்சை) -8 வாக்குகள், ரா.விஜயகுமார் (விடுதலைக் களம் கட்சி) -8 வாக்குகள் பெற்றிருந்தனர். ர.சசிகுமார் (சுயேட்சை) -7 வாக்குகள், செ.மா.ராகவன் (சுயேட்சை) -7 வாக்குகளை வாங்கி இருந்தனர். பா.குணசேகரன் (சுயேட்சை) -6 வாக்குகள், நூர் முகமது (சுயேட்சை) -6 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அ.ரவி (சுயேட்சை) ரா.ராஜேந்திரன் (சுயேட்சை) எஸ்.பால்ராஜ் (சுயேட்சை) -5 வாக்குகளை வாங்கி இருந்தனர். மு.பிரபாகரன் (சுயேட்சை) மற்றும் ர.குமார் 3 வாக்குகளை வாங்கி உள்ளனர்.