Asianet News TamilAsianet News Tamil

உச்சக்கட்ட பீதியில் ஓபிஎஸ்... நெருங்கும் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு..!

11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் திமுகவின் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து எதிர்தரப்பினர் அவர்களது வாதங்களை ஜனவரி 17-ம் தேதி முன்வைக்க உள்ளனர். 

11 mlas disqualified case
Author
Delhi, First Published Jan 9, 2019, 5:39 PM IST

11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் திமுகவின் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து எதிர்தரப்பினர் அவர்களது வாதங்களை ஜனவரி 17-ம் தேதி முன்வைக்க உள்ளனர். 

அரசு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி, திமுக கொறடா சக்கரபாணி மற்றும் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே.சிக்ரி, அசோக்பூஷன், அப்துநசீர் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 11 mlas disqualified case

இன்று ஓபிஎஸ் தரப்பில் முக்கிய வாதங்களை முன்வைக்கப்பட்டது. அதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவே கூடாது என கடிதம் கொடுத்தவர் திமுகவின் சக்கரபாணி. அப்படி இருக்க அதிமுக எம்எல்ஏக்கள் 11 பேர் வாக்குப் பதிவில் அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என சொல்லி வழக்கு தொடுப்பது நியாமற்றது என வாதிடப்பட்டது. மேலும் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் திமுகவின் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.  11 mlas disqualified case

மேலும் நீதிமன்றத்திலும் இந்த அரசியலை கொண்டு வருகிறார்கள். எனவே இந்த வழக்கை அடிப்படையிலேயே ரத்து செய்ய வேண்டும். வழக்கு தொடுத்திருக்க கூடிய வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் ஆகியோரும் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர். அவர்கள் அதிமுகவில் இல்லை. எனவே இவர்களின் மனுக்களும் அரசியல் உள் நோக்கம் கொண்டது. எனவே இவற்றையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.

இதில் குறுக்கிட்ட நீதிபதி வழக்கே அரசியல் வழக்கு, அதில் உள்நோக்கம் இருக்கத்தானே செய்யும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆளுங்கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி நிலையான அரசை குலைக்கவே எதிர்க்கட்சியினர் வழக்கு தொடுத்துள்ளனர். 11 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் கட்சியில்  சேர்ந்துவிட்டனர். அப்படி இருக்கையில் இதில் திமுகவுக்கு என்ன வேலை என ஓபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் தந்த ஒருவர் எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்துள்ளார் என ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

 11 mlas disqualified case

 இந்நிலையில் ஓபிஎஸ் வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து, ஜனவரி 17-ம் தேதி எதிர்தரப்பினர் வாதங்களை முன்வைக்க உள்ளனர். ஆகையால் இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பாதகமாக அமைந்தால் தமிழக அரசியலை புரட்டி போடும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios