Asianet News TamilAsianet News Tamil

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் ரூ.1,000 நிவாரணம்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

1000 relief in full curfew...CM Edappadi Palanisamy
Author
Chennai, First Published Jun 15, 2020, 4:40 PM IST

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு  ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாள்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

1000 relief in full curfew...CM Edappadi Palanisamy

தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க உள்ளது.

1000 relief in full curfew...CM Edappadi Palanisamy

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும்,

* திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

* செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 7 வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios