வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த சமயத்தில், ஒவ்வொரு கட்சியும் தங்களது தேர்தல் அறிக்கையை அறிவித்து  வருகிறது. அதன் படி திமுக மற்றும் அதிமுகவை விட அமுக்க தேர்தல் அறிக்கை சிறப்பாக வெளியிட்டு உள்ளதாக பரவலான கருத்து
நிலவுகிறது 

அதில் கீழ் உள்ள  இந்த 10 அறிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.  

மாணவர்கள் நல ஆணையம் மற்றும் காவலர்களுக்கு உளவியல் நிபுணர்கள் கொண்ட தனிக் குழு அமைக்கப்படும்.

ஏழு பேரை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்

ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கப்படும்

தமிழை ஆட்சி மொழியாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்

விவசாய பெருமக்கள் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் 

தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி இல்லை என கொள்கை முடிவு எடுக்கப்படும்

தமிழகத்திற்கு என தனி செயற்கைக்கோளை அமைக்கப்படும் 

பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புக்காக மாணவர்கள் வாங்கிய கல்வி கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்

60 வயது முதியவருக்கு மாதம் ரூபாய் நான்காயிரம் உதவி தொகையாக வழங்கப்படும்

கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கையடக்க சிறிய கணினி வழங்கப்படும்