பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நாகப்பட்டினம், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், தூத்துக்குடி, காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 6 மீனவர்கள், மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, படகு கவிழ்ந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
 படகு கவிழ்ந்தும், பல்வேறு நிகழ்வுகளிலும் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.