திமுகவில் ஒரு கோடி கொடுத்தால் மட்டுமே மாவட்ட செயலாளர் பதவி தரப்படும் என்று ராமநாதபுரம் மாவட்டம் போகளூர் தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த கதிரவன் அதிர்ச்சியான தகவலை வெளிப்படுத்தி திமுகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.

 சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் போகளூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் கதிரவன் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ்.நாகேந்திரன் தலைமையில் மாநிலத்தலைவர் எல்.முருகன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் தி.மு.க-வில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். அவர் தி.மு.க தன்னையும், தன் உழைப்பையும் மதிக்கவில்லை எனவும், மாவட்ட செயலாளர் பதவிக்கு ஒரு கோடி பணம் தர சொல்லி நிர்பந்தித்தாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "முப்பது ஆண்டுகாலம் நான் தி.மு.க-வில் கடுமையா உழைத்தேன், ஆனால் என் உழைப்பை மதிக்கவில்லை, மாறாக மாவட்ட பொறுப்பாளர் என்ன சொல்கிறாரோ..! அதை கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறார்கள். அ.தி.மு.க-வின் அனைத்து ஆட்களையும் அரசியலில் வீழ்த்தி உழைத்த என்னை பணம் இல்லையென்ற காரணத்தால் எனக்கு பதவியளிக்காமல் வேறொருவருக்கு பதவியளித்தனர்.

இதனை கட்சி தலைவர் ஸ்டாலினும் கண்டுகொள்ளவில்லை காரணம் கேட்ட என்னையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு கட்சியை சேராத ஒரு வியாபாரியை பணம் வாங்கிகொண்டு பதவியில் அமர்த்துகிறார்கள். "தி.மு.க கட்சி அல்ல கம்பெனி" என தி.மு.க-வின் பண வெறியை பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்.