ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் பல்பை நிறுத்தி விட்டு விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு நேரெதிராய் சமூக வலைதளப்பக்கங்களில் கருத்து பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். 

ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. வீட்டின் நான்கு மூலைகளிலும் ஔியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என உரையாற்றினார்.ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. சமூக இடைவெளி தான் முக்கியம் என்றார்.

இதனை கீழ்த்தரமாக கிண்டலிக்கும் விதமாக #விளக்கு_பிடி_குமாரு என்கிற ஹேஸ்டேக் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  அதில் மிகவும் அறுவருக்கத்தக்க வகைகளில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.