ஆட்சி கவிழ்ப்புக்கு பின், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையே நாளுக்கு நாள் ஏதாவது ரூபத்தில் பெரிதாகிக் கொண்டேதான் போகிறது. இந்த நிலையில், தில்லிருந்தா வாங்க ஒண்டிக்கு ஒண்டியா காலத்தில் நின்று  போட்டி போடலாம் என தேவெ கெளடா கூறியுள்ளார்.  

கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையிலான மோதல் மேலும் உக்கிரமடைவதாக தெரிகிறது. குமாரசாமி அரசு கவிழ காங்கிரஸ்தான் காரணம் என்று கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்த கட்சித் தலைவர் தேவெ கெளடா தில்லிருந்தா வாங்க ஒண்டிக்கு ஒண்டியா போட்டி போடலாம் என பேசியிருப்பது ஆசியால் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது. 

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் தேவெ கெளடா; சட்டசபைக்கு இடைத் தேர்தல் வந்தால், நாங்கள் தனியா தான் போட்டியிடுவோம். கூட்டணி வைக்க மாட்டோம். இடைத் தேர்தலுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் நாங்கள் தனியாகத்தான் போட்டியிடுவோம். யாருடனும் சேர மாட்டோம். மீண்டும் தவறு செய்ய மாட்டோம். அனைவருமே தனித் தனியாக நின்று பார்ப்போம் என்றார் அதிரடியாக. 

கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதில் யாருக்குமே மெஜாரிட்டி இல்லை. முதலில் பிஜேபி  ஆட்சியமைத்தது. ஆனால், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி, கவிழ்ந்தது. இதையடுத்து காங்கிரஸும், குமாரசாமியின் மஜத கூட்டணி வைத்து ஆட்சியமைத்து  குமாரசாமி முதல்வரானார். ஆனால், நாடாளுமன்ற தேதல் முடிவுக்கு பின் பக்கா ஸ்கெட்ச்சால், அடுத்தடுத்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளியேறி ஷாக் மேல் ஷாக் கொடுத்தனர், டிகே சிவகுமார் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது, ஒருகட்டத்தில் ஆட்சியே கவிழ்ந்தது. மீண்டும் எடியூரப்பா முதல்வரானார்.

இதனையடுத்து குமாரசாமி ஆட்சி கவிழ சித்தராமையாவின் உள்ளடி வேலைகள் தான் காரணம் என்பது மஜத கடுமையாக புகார் சொன்னது. ஆனால், சித்தராமையா இதை மறுத்துள்ளார். ஆனாலும் மோதல் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் ஏதாவது ரூபத்தில் பெரிதாகிக் கொண்டேதான் போகிறது. இந்த நிலையில், தில்லிருந்தா வாங்க ஒண்டிக்கு ஒண்டியா காலத்தில் நின்று  போட்டி போடலாம் என தேவெ கெளடா கூறியுள்ளார்.