லட்சங்களில் விற்கப்படும் ஆடம்பர ஹேண்ட்பேக்களை வாங்கி கிழிக்கும் யூ டியூபர்.. ஏன் தெரியுமா?
யூ டியூபர் ஒருவர் லட்சக்கனக்கில் மதிப்பிலான ஆடம்பர தோல் ஹேண்ட் பேக்களை வாங்கி அவற்றை கத்தரித்து கிழிக்கிறார்.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆல்வார் மாகாண மகாராஜா ஜெய் சிங், பின்னர் ஆடம்பரமான ரோல்-ராய்ஸ் கார்களை குப்பை வேன்களாக மாற்றினார் என்று சிலர் கூறுகின்றனர். லண்டனில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமிற்கு அவர் சென்ற போது, அவரது சாதாரண உடை மற்றும் தோல் நிறம் காரணமாக ஊழியர்கள் அவரை அவமதித்துள்ளனர்.
அடுத்து என்ன நடந்தது தெரியுமா? மஹாராஜா தனது ஊழியர்களிடம் ஷோரூமில் உள்ளவர்களுக்கு ஒரு சில கார்களை வாங்க வரவிருப்பதாகத் தெரிவிக்கச் சொன்னார். பின்னர் தனது இளவரசர் உடையில் திரும்பிய அவர் 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கினார். பின்னர் நாடு திரும்பிய அவர் குப்பைகளை சேகரிக்க ஆல்வார் நகராட்சிக்கு விலையுயர்ந்த கார்களை வழங்கினார். விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் குப்பை அள்ளும் வேன்களாக மாற்றப்பட்டன.
அதே போல தற்போது ஒரு நபர், லட்சக்கனக்கில் மதிப்பிலான ஆடம்பர தோல் ஹேண்ட் பேக்களை வாங்கி அவற்றை கத்தரித்து கிழிக்கிறார். அவரின் இன்ஸ்கிராம் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. வீடியோவில் அவர் கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான விலையுள்ள பைகளை வெட்டி, கிழிப்பதை பார்க்க முடிகிறது. இந்த ஆடம்பர பைகளில் சில சமயங்களில் ‘பிரீமியம்’ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது தான் இங்கு சிறப்பு..
இணையத்தில் பிரபலமாக இருப்பவர் தான் டேனர் லெதர்ஸ்டீன் என்று அழைக்கப்படும் வோல்கன் யில்மாஸ். துருக்கியைச் சேர்ந்த வோல்கன், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.. இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும், யூடியூப்பில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான இவருக்கு சந்தாதாரர்களும் உள்ளனர். மேலும் TikTok இல், அவர் தோல் உள்ளடக்கத்துடன் 9 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் குவித்துள்ளார்.
வோல்கனின் சமூக ஊடக பக்கங்களில் விலை மதிப்புமிக்க ஆடம்பர பைகள் துண்டிக்கப்பட்ட வீடியோக்களால் நிரம்பியுள்ளன.
ஆனால் அவர் ஏன் அதை செய்கிறார்?
இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் “ மக்கள் தோல் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவ வேண்டும் என்ற ஆர்வதால் இதை செய்வதாக கூறினார். மேலும் "நான் என் வாழ்நாள் முழுவதும் தோல் துறையில் இருந்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் எனது ஆர்வம் மற்றும் எனது வாழ்க்கையின் நோக்கம் பற்றிய தெளிவு எனக்கு கிடைத்தது - தோல் பற்றி மக்கள் புரிந்துகொள்ள உதவுவதற்காக நான் இங்கு வந்தேன்.
உலகின் வேகமான பாம்புகள் இவை தான்.. மின்னல் வேகத்தில் இரையை துரத்திக் கொல்லுமாம்..
எனது நண்பர்கள் அனைவரும் புதிய தோல் தயாரிப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னிடம் கேட்டார்கள். ‘செக் பண்ண முடியுமா?’, ‘நல்லா இருக்கா?’, ‘உண்மையா?’, ‘நான் அதிகமா பணம் கொடுத்தேனா?’ போன்ற கேள்விகளுடன் அதை என்னிடம் கொண்டு வந்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன என்பதை அறிந்த நான், தோல் பொருட்களை பயன்படுத்துவதை அதிகமானோர் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் தோல் பொருட்களை வாங்கும்போது அது நல்லதா என்பதைத் தீர்மானிப்பதில் அவர்கள் சிரமப்படுகிறார்கள், ”என்று மேலும் கூறினார்.
தோல் பொருட்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்வது, தாங்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் அந்த பைகள் உண்மையிலேயே மதிப்பு கொண்டதா என்பதை தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் நுழைந்ததாக தெரிவித்தார். தனது 11வது வயதில் தோல் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்ய தொடங்கியதாகவும் அவர் கூறினார்.
மேலும்“நான் துருக்கியில் பிறந்தேன், என் அப்பா அங்கு தோல் பதனிடும் தொழிற்சாலை வைத்திருந்தார். அதனால், ஆடைகளுக்கு செம்மறி ஆட்டு தோல்கள் செய்து வளர்ந்தேன். தோல் பதனிடுதல் வேதியியலைக் கற்றுக் கொள்ளத் தொடங்கியபோது எனக்கு 10-11 வயது இருக்கும், அது எனக்கு ஒரு அதிசயம். அப்போதிருந்து, நான் அந்த தோல் பதனிடும் கைவினை காலை காதலிக்கிறேன், ”என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
தோல் பதனிடும் பற்றி தான் படிக்கவில்லை என்றாலும், பல வருட பயிற்சியில் இருந்து அனுபவம் அறிவு காரணம 2009 ஆம் ஆண்டில், வோல்கன் அமெரிக்காவிற்குச் சென்றார். 2017 ஆம் ஆண்டில், பெகாய் என்ற தோல் பொருட்கள் பிராண்டை தொடங்கினார்..
சரி, ஆடம்பர பைகளை ஏன் கிழிக்கிறார்?
வோல்கன் 2-3 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியுடன் ஒரு மாலில் நடந்து செல்லும் போது லூயிஸ் உய்ட்டன் பிரீஃப்கேஸ் என்ற ஆடம்பர தோல் பையை வாங்கினார். இது தான் அவரை ஏமாற்றமடைய செய்த முதல் ஆடம்பரப் பை, வாங்கியது. ஆடம்பர வாடிக்கையாளராக இருந்த அனுபவம் இல்லாததால், அந்த பையை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக வோல்கன் பகிர்ந்து கொண்டார்.
"இது சுமார் $1,800 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,49,000) ஆகும். விற்பனையாளர் என்னிடம் சொன்னார், அது தோல் அல்ல, அது பூசப்பட்ட கேன்வாஸ் . நான் எப்படியும் அதை வாங்கி, அதன் சிறப்பு என்ன, எப்படி செய்யப்பட்டது என்று பார்க்க திறந்து பார்த்தேன். நான் தோல் பாகங்களை கூட மதிப்பீடு செய்தேன். ஆனால் அது மிகவும் ஏமாற்றமாக இருந்தது, குறிப்பாக பூசப்பட்ட கேன்வாஸ் பொருள் மற்றும் பயன்படுத்தப்பட்ட தோல். இருந்தது. ஆனால் அதன் விலை மட்டும் அதிகமாக இருந்தது. அதற்காக நாங்கள் ஒரு வீடியோவை உருவாக்கினோம்," என்று வோல்கன் தெரிவித்துள்ளார்.
இது அவரின் சமூக ஊடக பயணத்தின் தொடக்கமாக இருந்தது. ஜூலை 2022 இல், வோல்கன் தனது சமூக ஊடக பயணத்தைத் தொடங்கினார். "நான் டிக்டாக்கில் ஒரு நாளைக்கு ஒரு வீடியோவை உருவாக்க ஆரம்பித்தேன். நான் இதுவரை சமூக ஊடகங்களை அப்படிப் பயன்படுத்தியதில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு, முதல் வீடியோ வைரலானது,. நான் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு பணப்பையைப் பற்றி கேட்டேன், அது ஏன் $1,200 (தோராயமாக ரூ. 99,000) என்று கேட்டேன். அந்த அனுபவத்தைப் பற்றிய எனது கருத்தைப் பகிர்ந்து கொண்டேன், பின்னர் அந்த வீடியோ வைரலானது. அதன்பிறகு, நாங்கள் சில பைகளை வெட்டத் தொடங்கினோம், அது மக்களின் கோரிக்கைகளுக்குப் பிறகு பின்பற்றப்பட்டது," என்று வோல்கன் கூறினார்.
வோல்கன் டிக்டோக்குடன் தொடங்கியது, பின்னர் படிப்படியாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் என பல தளங்களுக்கும் விரிவடைந்தது. வோல்கன் யூடியூபில் நீண்ட மற்றும் ஆழமான வீடியோக்களை உருவாக்குவதை விரும்புவதாக தெரிவித்தார்..
“கடந்த ஆறு மாதங்களாக யூடியூப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். நீண்ட வீடியோக்களில் சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதும் எனது குறிக்கோள், மிகவும் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஆனால் யூ டியூப் பார்வையாளர்கள் TikTok பார்வையாளர்களைப் போன்றவர்கள் அல்ல. எனவே இரண்டு வெவ்வேறு பார்வையாளர்களுக்காக இரண்டு வடிவங்களை உருவாக்க விரும்புகிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் “ டிக்டோக் அல்லது இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் இருந்து பணம் வருவதில்லை. YouTube விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்கிறது, இது மெதுவாகச் சேர்க்கத் தொடங்குகிறது. நான் பைகளில் மட்டும் செலவழிக்கும் தொகையை இது மறைக்காது, ஆனால் அது சில திறனைக் காட்டுகிறது. அதனால்தான் யூடியூப்பிலும் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்,
ஆடம்பர பைகளை வாங்கும் செலவை நான் முதலீடாகவே பார்க்கிறேன். பார்வையாளர்களின் வளர்ச்சியையும், நாங்கள் இங்கு செலவழிக்கும் செலவுகளுக்கு நாம் பெறும் கவனத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அது ஒரு பெரிய விஷயம். இந்தத் துறையில் எனது அனுபவத்தை மக்கள் நம்பத் தொடங்கியவுடன், அவர்கள் எனது பிராண்டைக் கண்டுபிடித்து, பின்னர் எனது சில பொருட்களை வாங்கத்தொடங்கி உள்ளது. இது எனது பிராண்டில் மறைமுக சந்தைப்படுத்தல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதுவரை வெட்டியதில் மிகவும் விலையுயர்ந்த பை எது கேள்விக்கு பதிலளித்த அவர்” அது லூயிஸ் உய்ட்டன் கபூசின் என்று கூறினார். "இது USD 7,000 முதல் 7,500 வரை (சுமார் ரூ. 7 லட்சம்) சில்லறை விற்பனை செய்யப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
ஆனால் மற்றொரு லூயிஸ் உய்ட்டன் பேக் வீடியோ விரைவில் வெளிவர உள்ளது. நான் பாரிசில் வாங்கினேன். இதன் விலை சுமார் $3,700 (ரூ 3 லட்சத்திற்கும் மேல்). இது ஒரு மிகச்சிறிய பை, மிகவும் அழகானது மற்றும் நல்ல தோல். நான் விரும்பிய முதல் LV பை. நான் சொல்ல முடியும், இது ஒரு எல்வி தயாரிப்புக்கு நிச்சயமாக முதல் முறையாக வலிக்கும். நான் பணம் செலுத்தியதில் இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும், ”என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
வோல்கன் இதுவரை எந்த இந்திய பிராண்டிலிருந்தும் தோல் தயாரிப்பை மதிப்பீடு செய்யவில்லை, ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல தயாரிப்புகளை அவர் ஒப்புக்கொண்டார்.
உலகின் அரிதான பாஸ்போர்ட்.. 500 பேருக்கு மட்டுமே கிடைக்கும்.. பவர்ஃபுல் பாஸ்போர்ட் பற்றி தெரியுமா?
“நான் மதிப்பாய்வு செய்த நிறைய பைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இந்தியாவில் தொழில்துறையில் பரவலான வரம்பு இருப்பதால், இந்தியாவில் இருந்து வெளிவரும் மிகச் சிறந்த தோல் கைவினைப்பொருட்கள் அல்லது மிகவும் சாதாரணமான அல்லது குறைந்த அளவில் இருக்கலாம். நான் இந்தியாவிற்கு சென்றதில்லை. ஆனால் அங்கு எப்போது சென்றாலும் அங்குள்ள சில சக கைவினைஞர்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை சந்திக்க நான் எப்போது சென்றாலும் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால் இதுவரை, துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் இருந்து ஒரு பிராண்டை மதிப்பாய்வு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை," என்று தெரிவித்தார்.