ஆணுறைக்குள் வாழைப்பழத்தை சுற்றி சாப்பிட்ட கொடூரம்; 3 நாள் போராட்டத்திற்கு பின் உயிர் பிழைத்த இளைஞர்!
அமெரிக்காவில் நடந்த வினோதம்.. ஆணுறையில் வாழைப்பழத்தை வைத்து சாப்பிட்ட இளைஞரின் உயிரை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவரை அணுகியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து வர கூறியுள்ளனர். அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவரது சிறு குடலில் ஆணுறையால் சூழப்பட்ட வாழைப்பழம் இருந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் போராட்டத்திற்கு பிறகு ஆணுறைடன் இருந்த வாழைப்பழம் வெளியே எடுக்கப்பட்டது. அதன் பின்னரே அவருக்கு வயிற்றுவலி குறைந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அவரிடம் கேட்டபோது, தான் ஆணுறையில் வாழைப்பழத்தை வைத்து உண்டதை ஒப்பு கொண்டுள்ளார். உலக மருத்துவ வரலாற்றிலேயே ஆணுறையில் வாழைப்பழத்தை வைத்து சாப்பிட்ட சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை. இந்த வினோத சம்பவம் அமெரிக்காவில் மட்டுமில்லை பிற நாடுகளிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞருக்கு மன அழுத்தத்தால் ஹார்மோன் சுரப்பில் சிக்கல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் இப்படி செய்ய அதுவும் காரணமாக இருக்கலாம்.
சம்பந்தப்பட்ட இளைஞர் அறுவைசிகிச்சை நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, குமட்டல் அல்லது வாந்தி இல்லாமல் உணவு எடுத்து கொள்ள முடியும். குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவை அவரால் உண்ண முடிவதாகவும், தற்போது அவருக்கு சாதாரணமாக குடல் இயக்கம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: முதலிரவு ரகசியத்தை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டணும், ராஜஸ்தானில் பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கும் சடங்கு