பைக் பிரியர்களே..! அறிமுகமானது "புதிய மாடல் பைக்ஸ்"..! குஷியான வாலிபர்கள்..!   

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது எப்போதுமே பைக் (Bike). அதிலும் Yamaha என்றால் தனி பிரியம் என்று தான் கூற வேண்டும். 

R 15 - கல்லூரி மாணவர்களின் செல்லம், FZ - சரியான நேரத்தில் அழைத்து செல்லும் நண்பன், ZR - புல்லிங்கோக்களின் குழந்தை, Fascino பெண்களின் சாக்லேட். இவ்வாறு நாம்  YAMAHA வண்டி வகைகளை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.ஆனாலும் இதுவரை பல மாடல்களை YAMAHA அறிமுகம் செய்து இருந்தாலும், தற்போது பல புதிய  மாடல் பைக்குகளை அறிமுகம் செய்து உள்ளது. இதுவரை பல MODEL - களை YAMAHA தொடர்ந்து வெளிவிட்டு கொண்டுதான் இருக்கின்றது.

YAMAHA BRAND - இல் தோல்வி MODEL என்று ஒன்று கூட இதுவரை இல்லை. அனைத்தும் வெற்றி MODEL களே.. அந்த வரிசையில் வருகின்ற 2020 - கான சில MODEL BIKE- களை YAMAHA நிறுவனம் இன்று ITC CHOLA நட்சத்திர ஓட்டலில் வைத்து அறிமுகம் செய்தது. 

இந்த நிகழ்ச்சியில், YAMAHA நிறுவனத்தின் தலைவர் மோடோஃபுமி ஷிதாரா ( Motofumi shitara), துணை தலைவர் ரவீந்திர சிங் உள்ளிட்ட நிறுவனத்தின் முக்கிய புள்ளிகள் ஒன்றிணைந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் நடிகை சித்தாரா ஆகியோர் கொண்டனர்.

யமாஹாவின் தனித்தன்மை மக்கள் மத்தியில் பிரபலம் அடைய மிக முக்கிய காரணமாக  அமைந்த ஒன்று என்றால் அது "ப்ளூ கோர்" என்ஜன் கொண்ட யமாஹாவின் வாகனங்களே... இதன் மூலம் கிடைத்த நம்பிக்கை மற்றும் உற்சாகம் காரணமாக இந்திய மோட்டார் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஃப்ஷினோ 125 எஃப்ஐ  சிசி ஸ்கூட்டர், Ray Z R 125 மற்றும் MT -15 ( 150cc )மோட்டார் சைக்கிளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.

புதிய Ray Z R ரேலி 125 சிசி, எஃப்ஐ மோட்டார் சைக்கிள் தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு  உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை பார்க்கும் போதே இன்றைய இளைஞர்களின் மனதை பறித்து செல்லும் அளவில், பார்ப்பதற்கே மிகவும் ஸ்டைலாகவும் தரமாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் அமைந்து உள்ளது. 2 நிறங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பைக் ப்ளூ மேட்டாலிக் மற்றும் ஸ்பார்க்கிள் கிரீன் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபேஷினோ 125 எஃப்ஐ

புதிய ஃபேஷினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் தோற்றம் கிளாசிக் யூரோப்பியன் ஸ்டைலிங் உள்ளது. வெளிப்புற வடிவமைப்பு உயர் தரமானதாகவும், புது கேஜ்கள் என அழகிய தோற்றத்திலும், தரத்திலும் சிறந்தவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய BS VI MT - 15 ( 125cc ) ஸ்கூட்டர்

புதிய MT -15  வாகனத்தில் இரண்டு கியர் வீதம், கியர் ஷிப்ட்களை கொண்டு மேம்படுத்தப்பட்டு  உள்ளது. ஏ.என்.எஸ், க்ளட்ச் நேர்த்தியான அவுட்லைன் கொண்டு உள்ளது. முறுக்கு விசை கொடுக்கும் போதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து விதத்திலும்  மேம்ப்படுத்தப்பட்டு உள்ளது.மேலும் முன் புறம் அழகூட்டும் லைட், அதே போன்று பின்புறமும்  சிறு அளவிலான செங்குத்தான பின் விளக்கு என எண்ணற்ற விரிவான சிறப்பம்சங்களையும்  கொண்டுள்ளது.

யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் திரு.மோடோஃபூமி ஷிதாரா இது குறித்து தெரிவிக்கும் போது,

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யமாஹாவின் புதிய மாடல்கள் கண்டிப்பாக அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும். தினந்தோறும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். காரணம்... இதற்கு முன்னதாக தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்த மற்ற பைக்குகளை காட்டிலும் முற்றிலும் பல விதங்களில் மேம்படுத்தப்பட்டு உயர்தர தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தோம். அதற்கேற்றவாறு மக்களின் முழு ஆதரவோடு தற்போது அறிமுகம் செய்து உள்ளோம் சென்னையில் சமீபத்தில் உதயமான "ப்ளூ ஸ்கொயர்" விற்பனை நிலையம் போன்று மேலும் 100 விற்பனை நிலையங்களை 2020ம் ஆண்டுக்குள் திறக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் இசை அமைப்பாளர் "அனிருத்" பேசும் போது, 

யமாஹா பைக் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்த ஒரு பைக். ஃபேசினோ ஸ்கூட்டி யமாஹாவின் மிக சிறப்பான படைப்பு என்று தான் சொல்ல வேண்டும். இந்த பைக்கை எனது  பெற்றோர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும் என ஆசை படுகிறேன்" என தெரிவித்து உள்ளார்.