yahoo data hackers theft

யாஹூ நிறுவனத்தின் 300 கோடி தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படுவதாக யாஹூ வாடிக்கையாளர்களும் பங்குதாரர்களும் தொடர்ச்சியாக புகார்கள் அளித்துவந்தனர். இதுதொடர்பான புகார்கள் அதிகமாக வந்ததை அடுத்து இதுதொடர்பாக யாஹூ நிறுவனம் ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வில், யாஹூ நிறுவனத்தின் 300 கோடி தகவல்களும் ஹேக்கர்களால் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவையனைத்தும் 2013-ம் ஆண்டிலேயே திருடப்பட்டுவிட்டதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது. பாஸ்வேர்டுகள் மட்டுமின்றி டெக்ஸ்ட் தகவல்கள், பேமன்ட் கார்டு டேட்டா அல்லது வங்கி கணக்கு விபரம் உள்ளிட்ட தகவல்களும் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.