பீரை நீங்களே உங்கள் தேவைக்கு ஏற்ப, உங்களுக்கு விருப்பட்ட நேரத்தில் தயாரித்து குடித்து மகிழ்ச்சி கொண்டால் எப்படி இருக்கும்.
ஓய்வெடுக்க நினைக்கும் சிலருக்கு சட்டென்று நினைவில் வரும் ஒரு விஷயம் தான் சில்லென்ற ஒரு பீர். ஓய்வு நேரத்தில் நண்பர்கள்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு ஒரு பீர் குடிப்பது பலருக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று. மேலும் உலக அளவில் பீர் தயாரிக்கும் நிறுவனங்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருவது, அதன் மீது உள்ள ஆர்வத்தின் ஆதாரம் என்றே கூறலாம்.
ஆனால் அதே பீரை நீங்களே உங்கள் தேவைக்கு ஏற்ப, உங்களுக்கு விருப்பட்ட நேரத்தில் தயாரித்து குடித்து மகிழ்ச்சி கொண்டால் எப்படி இருக்கும். ஆம் அதற்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளது Neuzeller Klosterbrau என்ற ஒரு ஜெர்மன் நாட்டு மதுபான நிறுவனம். அந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது என்ன தெரியுமா? அது தான் "பீர் பவுடர்".
ஞாபக மறதியா? உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..
ஆம் நீங்கள் படித்தது சரிதான், நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த இன்ஸ்டன்ட் பீர் பவுடர், ஒரு இன்ஸ்டன்ட் காபி மற்றும் இன்ஸ்டன்ட் ப்ரோட்டீன் ஷேக் போலத் தான். இந்த பீர் பவுடரை குறிப்பிட்டுள்ள அளவில் எடுத்து, அதை தண்ணீரில் கலந்தால் உங்களுக்காக அற்புதமான பீர் நொடிகளில் ரெடி. ஆனால் இப்பொது ஆல்கஹால் அல்லாத பீர் பவுடர் தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் ஆல்கஹால் உள்ள பீர் பவுடர் அறிமுகமாகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு, பீரின் உலகளாவிய போக்குவரத்தில் கணிசமான எடையை குறைகின்றது என்று அந்த மதுபான நிறுவன மேலாளர் ஸ்டீபன் ஃபிரிட்சே தெரிவித்துள்ளார். 1 கிலோ பீர் பாட்டில்கள் எடுத்துச்செல்லும் இடத்தில் வெறும் 45 கிராம் பீர் பவுடர் எடுத்துச்சென்றால் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த நிறுவனம் ஒரு படி மேலே சென்று பீர் பிரியர்கள் பீரில் குளித்து மகிழும் வகையில் குளியல் பீர், க்ளுட்டன் இல்லாத பீர் என்று பல வகை பீர் தயாரிக்க ஆவணம் செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Benefits of Cashews: முந்திரி சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமா? வாங்க தெரிஞ்சிகலாம்..!!
