world idli day on mar 31

“உலக இட்லி நாள்” கோலாகல ஏற்பாடு... 2500 வகையான இட்லி செய்து உலக சாதனை செய்ய திட்டம்...

இட்லி

இட்லி எந்த வகையில் நம் உடலிற்கு நல்லது என பல ஆய்வுகளை மேற்கொண்டு, இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களால் பொதுவாக விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு உணவு பொருள் இட்லி என்பதில் மாற்றம் இல்லை. இதனை போற்றும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 30-ம் நாள் உலக இட்லி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் 30 ஆம் தேதி உலக இட்லி நாளை முன்னிட்டு 2500 வகையான இட்லி செய்து உலக சாதனை படைக்க உள்ளார் 'மல்லிப்பூ இட்லி' புகழ் முனைவர் மு. இனியவன்.

இட்லி வகைகளில் சில :

காஞ்சிபுரம் இட்லி, குஷ்பு இட்லி, தட்டை இட்லி, மினி இட்லி, சேமியா இட்லி, பிரைடு இட்லி, டோக்லா போன்றவை தாண்டி இளநீர் இட்லி, பாதாம் இட்லி, பீட்ஸா இட்லி, புதினா இட்லி, ராஜா ராணி இட்லி, மெகா இட்லி என 2500 வகையான இட்லி தயாரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளனர்.

சிறப்பு இட்லி

எம்.ஜி.ஆர்., சிவாஜி, முரசொலி மாறன், மனோரமா உருவ இட்லிகளையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது

எங்கு எப்போது..?

பாரி முனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 05.00 மணிக்கு ( மார்ச் 29 )

இந்த இட்லி விழாவை காண பலரும் ஆர்வமுடம் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர் .