wood peeker damage trees why?
மரங்கொத்திப் பறவை மரத்தின் தண்டுகளில் அமர்ந்து மரத்தைக் கொத்திப் கொண்டிருப்பதைப் பார்கிறோம். அவை மரங்களைக் கொத்தி சிறு ஒட்டைகளை உருவாக்குகின்றன. இதனால் மரத்திற்கு ஏதேனும்தீமை உண்டா? என்றால் மரத்திற்குத தீமை எது விளைவதில்லை மாறாக மரத்திற்கு நன்மையே உண்டாகிறது.
மரத்தின் உட்பகுதியில் எண்ணற்ற பூச்சி, புழுக்கள் உருவாக்கி அவை மரத்திற்குச் சேதம் விளைவிக்கின்றன. மனிதன் உட்பட மற்ற உயிரினங்களின் கண்களுக்கு அப்பூச்சிகள் நேரடியாகத் தெரிவதில்லை. மரங்ககொத்திப் பறவைகள் அவற்றைக் கண்டறிந்துவிடுகின்றன. அவை தன் கூரிய அலகால் மரப்பட்டையின் மீது தட்டி தட்டி அங்கு துளைகளை உருவாக்கி உள்ளிருக்கும் பூச்சிகளை உண்கின்றன இதனால் மரம் சேதமாவது தடுக்கப்படுகிறது.
