பெண்கள் பாலுறவில் தங்கள் துணையிடம் கேட்க தயங்கும் கேள்விகளும் அதற்கு நிபுணர்களின் பதில்களும்
  
கேள்வி : துணையுடன் உறவில் ஈடுபடும் போது, வேறு நபர் குறித்த எண்ணங்கள் வருவது தவறா?

பதில்: அந்த நபர் துணையை போன்ற குணாதியங்கள் அல்லது பாத்திர ஒற்றுமை கொண்டிருக்கிறார்களா?  என பார்க்க வேண்டும். வேறு நபரை எண்ணாமல் உறவில் உச்ச இன்பத்தை எட்ட முடியவில்லை என்றால் கவுன்சிலிங் அவசியம்.

கேள்வி : பெண்கள் எப்போதெல்லாம் உச்சக்கட்ட இன்பம் அடைவதில் போலியாக நடிப்பார்கள்?

பதில்: தாங்கள் உச்சநிலை அடையவில்லை என்பது துணைக்கு வருத்தம் அளிக்குமோ, அல்லது குறைபாடாகோ காண்பாரோ என்ற எண்ணத்தால் கூட போலியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது

கேள்வி : கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது அல்லது வேறு கருத்தடை விஷயங்கள் செக்ஸ் தாக்கத்தை குறைக்குமா?

பதில் : கருத்தடை மருந்துகள் தாக்கத்தை ஏற்படுத்ததான் செய்கின்றன. ஐ.யு.டி எனப்படும் காப்பர் காயில்கள் மாதவிடாய் நாட்களை நீட்டிக்கிறது அல்லது உடலுறவில் ஆர்வத்தை குறைக்கிறது. கருத்தடை மாத்திரைகள் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்ணுறுப்பில் வைத்து பயன்படுத்தும் போது மாதவிடாய் சுழற்சியின் மத்திய காலத்தில் ஏற்படும் கலவி உணர்வுகளை குறைக்கிறது. 
 
கேள்வி : சராசரியான ஆண்குறி அளவு என்ன? ஆண்குறி அளவினால் தாக்கத்தில் மாற்றம் ஏற்படுமா?

பதில்: விறைப்பு நிலையில் ஐந்தில் இருந்து ஏழு அங்குலம் வரை. இயல்பான நிலையில் 3 முதல் 3.5 அங்குலம் வரை சராசரி அளவு பெண்ணுறுப்பில் சென்சிடிவான பகுதியான பெண்குறியின் நுழைவாயில் இரண்டு அங்குலம் வரை தான் இருக்கிறது. எனவே அதிகப்படியான அளவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. 

45% பெண்கள் துணையின் ஆண்குறி அளவு குறித்து பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. பர்சனாலிட்டி மற்றும் அழகியல் பழக்கங்கள் குறித்து தன் அதிக கவனம் செலுத்துகிறார்கள். விறைப்பின் போதிலும் மூன்று அங்குலத்திற்கு குறைவான அளவில் ஆண்குறி இருந்தால் பரிசோதனை அவசியம். 

கேள்வி : சாதாரணமாக எவ்வளவு நேரம் உடலுறவு நீடிக்க வேண்டும்? 

பதில்: பொதுவாக 7 முதல் 13 நிமிடங்கள் போதுமான இன்பம் அடைவதற்கு ஏற்ற நேரமாக காணப்படுகிறது.