why we says saravanabava
கந்தசஷ்டி விரதம் இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில், முருக பெருமானுக்கு பூஜைகள் செய்தும், கந்த சஷ்டி கவசத்தை பாடியும், விரதமிருந்து முருக பெருமானை மனதில் நினைத்து, நினைத்தது நிறைவேற வேண்டும் என பல பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள் .
திருச்செந்தூர் முருகர் கோவிலில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகர் கோவில்களில் பக்தர்கள் ஏராளமாக கூடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன என்று தெரியுமா?
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு ஆக,
பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.
ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
பழனி - மணிபூரகம்
சுவாமிமலை - அனாஹதம்
திருத்தணிகை - விசுத்தி
பழமுதிர்சோலை - ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு வந்தால் நல்லது.
