தலையணைக்கு கீழ் பூண்டு வைத்து தூங்குங்க .....காரணம் தெரிஞ்சிக்க இத படிங்க ....
தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது என்பது உண்மை .
பத்து வருடத்திற்கு முன் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்கு விளக்கை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது. இதற்கிடையில் தற்போது , வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் வீடு திரும்பவே இரவு தாமதமாகிறது. அதன் பிறகு மொபைல் போன் கையில் எடுத்தால், நேரம் செல்வதே தெரியாது . இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது.
தூக்கமின்மை
மொபைல் மற்றும் இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுவது, பொழுதுபோக்காக இருப்பினும், வேலையாக இருப்பினும் கணினி முன்பே அமர்ந்திருப்பது உறக்கத்தை வலுவாக கெடுக்கிறது
மனநல சீர்கேடு
நல்ல உறக்கம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. உறக்கம் சீர்கெட்டு போனால், மனநலம் சீர்கேடும். மனநலம் பாதிப்பது உங்கள் வேலை, உறவு என உங்கள் அன்றாட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்.
பூண்டு
இதற்கான நல்ல உறக்கத்தை பெறுவதற்கான தீர்வு உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது. ஆம், தினமும் உறங்க செல்வதற்கு முன்னர் உங்கள் தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல்லை வைத்துவிட்டு உறங்குங்கள்.
தன்மை
பூண்டின் லேசான உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கவித்து, தூக்கமின்மை கோளாறை சரிசெய்ய உதவுகிறது.
நன்மைகள்
பூண்டு ஒரு சிறந்த மூலிகை உணவுப் பொருள். உங்கள் அன்றாட உணவில் தினமும் சிறிதளவு பூண்டை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேலோங்க வைக்கும். பூண்டு, சளி தொல்லை, தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள் / அடைப்புகள், கல்லீரல் நலன் மற்றும் நோய் எதிர்ப்பு என பல நன்மைகள் புரிந்து உதவுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பூண்டை நாம் உறங்கும் போது தலையணை அடியில் வைத்து உறங்குவது மிகவும் நல்லது
