உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய உள்ள ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

இன்று மாலைக்குள் லேசாக ஒரு மன குழப்பம் ஏற்படும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்க நேரிடும். பயணங்களால் தொல்லை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது.

ரிஷப ராசி நேயர்களே..!

பிரிந்து சென்றவர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.மற்றவர்களிடம் அன்பாக பேசி பழகுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு பிடித்த செய்தி வந்து சேரும்.

மிதுன ராசி நேயர்களே...!

கடன் சுமை நாளுக்கு நாள் குறைய தொடங்கும். நல்லவர்களின் நட்பு தொடர்ந்து கிடைக்கும். பொது வாழ்க்கையில் புகழ் அதிகரிக்கும். பதவியில் உள்ளவர்கள்  நட்பு பாராட்டுவீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைகள் வழியில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கி ஆர்வமாக இருப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

வசதியாக வாழ்வதற்கு தேவையான ஒன்றை செய்ய முற்படுவீர்கள். வருங்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

நட்பு வட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். வீண் செலவுகள் குறையும்.தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி அடையும். உங்களைவிட்டு எதிரிகள் விலகுவார்கள்.மற்றவர்கள் உங்களிடம் பாசமாக இருப்பார்கள்.

சிம்ம ராசி நேயர்களே..! 

பணப்புழக்கம் அதிகரிக்கலாம். வீடு மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு செயல் ஒன்றை செய்து முடிக்கக் கூடிய நாள். வங்கி சேமிப்பு உயர வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். திடீரென மேற்கொள்ளும் பயணங்களால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பூமி வாங்கும் யோகம் உண்டு. புதிய வாகனம் வாங்க கூடிய நிலை ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே..!

ஊர்மாற்றம் இடமாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். புகழ்பெற்றவர்களின் சந்திப்பால் பெருமையாக உணர்வீர்கள். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

மகர ராசி நேயர்களே...!

திட்டம் போட்டு வெற்றி பெறும் நாள். உத்தியோகத்தில் மிக உயர்ந்த நிலை அடைய வாய்ப்பு ஏற்படும். உங்களுக்கு தேவையான பணம் மிக எளிதாக கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களின் நிர்வாகத் திறமையை பார்த்து மற்றவர்கள் வாயடைத்து போவார்கள். பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வருவார்கள். வெளிவட்டாரத்தில் உங்களது நட்பு வட்டம் விரிவடையும்.

மீன ராசி நேயர்களே..!

திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். உறவினர் வழியில் ஒரு நல்ல செய்தி உங்களை வந்தடையும். இன்றைய நாள் கவனமாக இருப்பது நல்லது. இது நாள் வரை இருந்துவந்த சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.