ஒரு ஆணும் பெண்ணும் முதல் முறையாக டேட்டிங் செல்லும் போது எதனை செய்யக்கூடாது எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நேரம் கடைபிடிக்க வேண்டும்..!

தன்னுடைய துணையை சொன்ன நேரத்தில் சரியாக சந்திக்க வேண்டும். தேவை இல்லாமல் முதல் முறையாக பார்க்கும் போதே நிறைய நேரம் காத்திருக்க வைக்க கூடாது

முன்னாள் காதல் பற்றி புகழ்வது

தான் என்னமோ தாஜ் மகாலை கட்டியது போல, மனதிற்குள் அவளை இப்படி காதலித்தேன், எப்படி எல்லாம் இருந்தோம் என பழைய நினைவுகளை புது காதலி அல்லது காதலியுடன் முதல் சந்திப்பில் தெரியப்படுத்தாமல் தவிர்ப்பதே நல்லது. இல்லை என்றால் வாழ்நாளில் இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் அதை சொல்லி காண்பித்து உங்கள் மனம் புண்படும்படி சொல்லி காண்பிப்பார்கள்
முதல் முறை டேட்டிங் செல்லும் போது, போனை ஒரு பக்கம் வைத்து விட்டு, தன்னை பார்க்க வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உணவை ஆர்டர் செய்யும் போது, அளவுக்கு அதிகமாக ஆர்டர் செய்வதோ அல்லது குறைவாக ஆர்டர் செய்வதோ கூடாது. அதே போன்று அதற்கான கட்டணம் செலுத்தும் போது, இருவருமே நானே பில் செலுத்துகிறேன் என்று பெண்ணும், அதே வேளையில் இல்லை நான் கொடுக்கிறேன என ஆணும் தெரிவிக்க வேண்டும்....

நான் செலுத்துகிறேன் என ஆண் சொன்ன உடன் பெண் அமைதியாக இருப்பதும், பெண் சொன்ன உடன் ஆண் உடனடியாக ஓகே சொல்வதும் தவறான ஒன்று.

ஆனால் ஒருமுறைக்கு நான்கு முறை கட்டாயப்படுத்திய பின், இருவரில் யாராவது ஒருவர் செலுத்தலாம்
மது அருந்துவது. ஒரு பந்தாவிற்கு மது அருந்தலாமே என முதல் சந்திப்பில் முயற்சி செய்து, போதையில் மிதந்தால்...கதை முடிந்துவிடும்.