Horoscope: சித்திரை மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள் யாரெல்லாம்? நீங்களும் தெரிஞ்சிக்கணுமா..?
Horoscope: இந்த சித்திரை மாதம் முழுவதும், மேஷத்தில் உச்சமடையக்கூடிய சூரியன் எந்தெந்த ராசிகளுக்கு ஆளுமை, கெளரவம், பணம், கல்வி போன்ற அற்புத பலன்களை தருவார் என்பதை தெரிந்து கொள்வோம்.
நவகிரகங்களின் ராஜா என்றழைப்படும் சூரிய பகவான், மேஷ ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலம் சித்திரை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த சித்திரை மாதம் முழுவதும், மேஷத்தில் உச்சமடையக்கூடிய சூரியன் எந்தெந்த ராசிகளுக்கு ஆளுமை, கெளரவம், பணம், கல்வி போன்ற அற்புத பலன்களை தருவார் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு அஷ்டம் ஸ்தானத்தில் சூரிய பகவானின் சஞ்சாரம் நிகழ்கிறது. இந்த மாதத்தில் நீங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபத்தை கட்டுப்படுத்தலாம்.
மகரம்:
மகர ராசிக்கு இந்த மாதம் முழுவதும் சிறப்பான பலன்களையே தரும். இந்த மாதத்தில் அதிஷ்டம் உங்கள் பக்கம். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெரிய முதலீடுகள் லாபம் தரும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
மீனம்:
மீனம் ராசிக்கு இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களையே தரும். பேச்சில் தெளிவு வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். செல்வம் பெருகும், வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.
மிதுனம்:
சித்திரை மாதம் முழுவதும், குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.
கடகம்:
சித்திரை மாதம் முழுவதும் வாழ்வில் வெற்றி கிடைக்கும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆன்மிக பயணம் ஏற்படும். கல்வியில் மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் இருக்க வேண்டும். திருமண யோகம் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.