வெண்புள்ளி பிரச்சனைக்கு மருந்து கண்டுபிடிப்பு...!  பல ஆண்டு போராட்டத்திற்கு பின் கிடைத்த நிரந்தர தீர்வு..! 

நாடு முழுவதும் சுமார் 6 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள வெண் புள்ளி பிரச்சனைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

அதன்படி இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 6 கோடி பேர் வெண்புள்ளிகள் அதாவது வெண்குஷ்டம் என சொல்லப்படும் வெண் புள்ளி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஒரு விதமான பதற்றம், தாழ்வுமனப்பான்மை, கூச்சம் ஏற்படுகிறது. உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த பிரச்சினையால்  பாதிக்கப்பட்டவர்கள் மன ரீதியாக மிகவும் பாதித்து ஒருகட்டத்தில் தற்கொலை கூட செய்துக் கொள்ளும் அளவுக்கு செல்கைன்றனர்.

இது தவறான ஓர் முடிவு. வெண்குஷ்டம் என்பது ஒரு நோய் அல்ல என்பதனை புரிந்து கொள்ளுதல் வேண்டும். இந்த ஒரு நிலையில் தற்போது "லுகோஸ்கின்" என்ற மூலிகை மருந்துகளுக்கு மிகச்சிறப்பாக செயல்படுகிறது. இந்த மருந்தை 300 முதல் 400 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தற்போது ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு இயக்கம் கருத்தரங்கம் நடத்தி வருகிறோம்.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் வரும்(feb) இரண்டாம் தேதி அண்ணா சாலை ஸ்டேட் வங்கி அருகில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் இதில் பங்கேற்று இதற்கான சிகிச்சை பெற்று வெண்புள்ளி பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஓர் அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.