கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தால், உங்கள் காதல் கைக்கூடும். திருமண யோகம் கிடைக்கும். இந்த மாதம் நல்ல செய்தி உங்கள் காதுக்கு வரும். தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பூஜை செய்து வணங்க வேண்டும்.

பிப்ரவரி 14ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களின் காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த, திருமணத்திற்கு தயாராக சிறந்த நாளாக கருதுவர்.

எனவே, கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தால், உங்கள் காதல் கைக்கூடும். திருமண யோகம் கிடைக்கும். இந்த மாதம் நல்ல செய்தி உங்கள் காதுக்கு வரும். தினமும் காலை மாலை இரண்டு வேளையும் இந்த மந்திரத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய|

தன்வந்திரியே |

அமிர்தகலச ஹஸ்தாய |

சர்வ ஆமய நசனாய|

த்ரைலோக்ய நாதாய |

ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா|| 

வணங்க வேண்டிய கோவில்கள்:

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். குறிப்பாக பெண்கள் காதல் கைகூட அங்கிருக்கும் மன்மதனின் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். அதேபோல ஆண்கள் ரதியின் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தங்கள் விருப்பம் நிறைவேறி திருமணமானவுடன் தம்பதிகளாக மீண்டும் அங்கு வந்து வழிபாடு செய்யவேண்டும் என்பதும் நியதி.
காதல் கைகூட வரமருளும் மரங்கள்:

கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது பட்டீஸ்வரம். பட்டீஸ்வரம் துர்கை அம்மன் கோயிலில் தலவிருட்சமாக விளங்குவது வன்னிமரம். இங்கு இரு வன்னி மரங்கள் உள்ளன. ஒரு வன்னிமரத்தின் கீழ் மற்றொரு மரம் வளராது என்கின்றனர். ஆனால் இங்கு இரண்டும் வளர்ந்து நிற்கின்றன. இங்கிருக்கும் ஒரு மரத்தில் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணை நினைத்து மஞ்சள் கயிறு கட்டினால் விரைவில் அந்தக் காதல் வெற்றியடைந்து பெற்றவர்களின் சம்மதத்தோடு திருமணம் கைகூடும் என்கின்றனர். மற்றொரு மரத்தில் கயிற்றினைக் கட்ட குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். 

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்:

சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25 வது தேவாரத்தலம் ஆகும். திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோவில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது.

அய்யம்பேட்டை ஸ்ரீவைகுண்டநாராயண பெருமாள்: 

பிற்காலச் சோழர்களின் காலத்தைச் சேர்ந்த அய்யம்பேட்டை ஸ்ரீவைகுண்டநாராயண பெருமாள் திருக்கோயிலில் ஒரு சிறப்புப் பிரார்த்தனை உண்டு. காதல் கைகூடிட இங்கு ஒரு வேண்டுதல் செய்யப்படுகிறது. காதலில் பிரச்னை ஏற்படுமாயின் எலுமிச்சைப் பழம் ஒன்றை இங்குள்ள பெருமாள் காலடியில் வைத்து உரிய மூலமந்திரம் சொல்லி அர்ச்சிக்கின்றனர். பின்னர் பழத்தைப் பிழிந்து சாறை அருந்தினால் அவர்களது வேண்டுதல் நிறைவேறிக் காதல் கைகூடும் என்று நம்புகின்றனர். இதைப் பிரிந்திருக்கும் தம்பதிகள் செய்ய பிரிந்துசென்றவர் மனம் மாறி ஒன்றிணைவர். எனவே, மேற் கூறிய கோவில்களில் வழிபட்டு, உங்கள் காதல் வெற்றி பெற்று திருமணம் கைகூட வாழ்த்துக்கள்!