மழைக்காலத்தில் எந்தமாதிரியான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மழைக்காலங்களில் குளிர்ந்த காற்று காரணமாக மூளை சுறுசுறுப்பின்றி இருக்கும். இதன் காரணமாக வேலை செய்வதில் ஆர்வம் குறைந்து மந்த நிலையில் இருக்கும். எனவே மீண்டும் அதை இயல்பு நிலைக்கு கொண்டுவர ஒரு கப் சூடான டீயுடன், மொறுமொறுப்பாக ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட தோன்றும்.
நாம் சாப்பிடும் ஸ்னாக்ஸ் எந்த வகையாக இருந்தாலும் அது நம்முடைய வயிற்றின் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். எனவே மழைக்காலத்தில் ஆரோக்கியத்துடன் இருக்க சில வகையான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவை என்னென்ன என்றும், அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
- தள்ளு வண்டியில் விற்கப்படும் பானி பூரி, பேல் பூரி போன்றவற்றை மழை காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பருவமழை காலத்தில் சுத்தமும் சுகாதாரமும் ரொம்பவே முக்கியம்.
- ரோட்டோரங்களில் விற்கப்படும் பழத்துண்டுகளை வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் அவற்றின் மீது தூசிகள், ஈக்கள், கொசுக்கள் போன்றவை அமர்ந்து அதன் எச்சத்தை விட்டு சென்றிருக்கும்.
- மழைக்காலத்தில் டீ கடையில் விற்கப்படும் நமத்துப் போன சமோசா, வடை, பஜ்ஜி போன்றவற்றை வாங்கி சாப்பிட வேண்டாம்.
- பொதுவாக மழை காலத்தில் அடிக்கடி பவர் கட் ஆகும். கோழி, இறைச்சி போன்ற உணவுகள் முறையாக. எனவே கடைகளில் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடாமல் இருப்பது தான் நல்லது.
- மழை காலத்தில் மீன் போன்ற கடல் உயிரினங்களை பிரஷ்ஷாக சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லையெனில் அதை தவிர்க்கவும்.
- மழை காலத்தில் பால் பொருட்கள் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் சீக்கிரமாகவே கெட்டுவிடும். எனவே அவற்றிலிருந்து தூரமாக விலகி இருங்கள்.
- அதுபோல தெருவோரங்களில் விற்கப்படும் கரும்பு ஜூஸ், லெமன் சோடா போன்றவற்றை மலைகாலத்தில் ஒருபோதும் குடிக்கவே வேண்டாம். ஏனெனில் அவற்றில் சேர்க்கப்படும் ஐஸ்கட்டி எந்த தண்ணீரில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியாது.
- கடைகளில் விற்கப்படும் பிரெஷ் சாலட் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதை வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தி மற்றும் வெட்டும் நபரின் கைகளில் எத்தனை அழுக்குகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. எனவே அதையும் சாப்பிடாமல் தவிர்ப்பது தான் நல்லது.
குறிப்பு :
மழை காலத்தில் நீங்கள் உங்களுக்கு பிடித்த ஸ்னாக்ஸ் உணவுகளை சாப்பிட விரும்பினால் வீட்டில் தயாரித்து சுட சுட சாப்பிட்டு மழையுடன் குளிரை அனுப்பவீயுங்கள்!!
