"சொந்த கருத்து" சொன்னதுக்கே...ஆளுநர் கிட்ட மனு கொடுக்குது திமுக..! அமைச்சர் ஜெயக்குமார் கமெண்ட்ஸ்..! 

இஸ்லாமியர்களுக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்த கருத்து அவருடைய சொந்த கருத்தே தவிர.. அதிமுகவின் நிலைப்பாடு அல்ல என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சிறுபான்மையினர் ஓட்டினை பெறுவதற்காக திமுக தொடர்ந்து இந்துக்களைஅவமதித்து வந்தால் தமிழகத்தில் "இந்துத்துவா பயங்கரவாதம் உருவாகும்" என ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததை அடுத்து சர்ச்சை எழுந்தது.

இதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "ராஜேந்திரபாலாஜி இவ்வாறு தெரிவித்தது.. அவருடைய சொந்த கருத்தே தவிரஅதிமுகவின் நிலைப்பாடு அல்ல" என தெளிவாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜேந்திரபாலாஜி சொன்ன அவருடைய சொந்த கருத்துக்காக ஆளுநரிடம் திமுக எப்படி முறையிட முடியும் என கேள்வியும் எழுப்பியுள்ளார். அதேவேளையில் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பேசியதில்  எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.