உங்களுக்கு திடீரென முடி கொட்டினால்  காரணம் இதுவாக கூட இருக்கலாம்..! 

நம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பை விட, தலைமுடி கொட்டியதால் ஏற்படும் மன உளைச்சலே அதிகம் என சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது முடி 

சரிவர பயணிக்காமல் சரியான ஊட்டச்சத்து உணவு இல்லாமல் இருப்பதும் தலைமுடிக்கு மிக முக்கிய காரணமாக அமையும். இன்னும் சொல்லப்போனால் தலை முடி உதிர்வதை யாராலும் தடுக்கவே முடியாது. வயது அதிகரிக்க அதிகரிக்க... அதேபோன்று பரம்பரையை பொறுத்தே முடியின் பொலிவு எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

மேலும் திடீரென முடி கொட்டுதல் அதிகமாக இருந்தால், அதற்கு சில மருத்துவ காரணங்களும் இருக்கலாம். தலைமுடி மட்டும் கொட்டினால் அதற்கு என்ன காரணம் என்று ஆராய்வதை விட உடன் புருவம் மற்றும் கண் இமையில் இருக்கக்கூடிய முடியும் கொட்டினால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை தேவை.

தைராய்டு பிரச்சனை இருந்தால் தலைமுடி கொட்டும். மேலும் உடலும் அசதியாக காணப்படும். அதேபோன்று தலைமுடி கொட்டுதல் மட்டுமின்றி உடல் எப்போதும் ஒருவிதமான சோம்பலில் இருந்தால் சத்துணவு சற்று குறைவாக உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.

நகங்கள் எளிதில் உடைந்து விடுதல், தலைமுடி கொட்டுதல் இவை இரண்டும் இருந்தால் இரும்பு சத்து குறைவு என்றும், ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிந்து கொள்ளலாம்.அதேபோன்று திடீரென முடி கொட்டினால் அப்போதைய காலக்கட்டத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட மெடிசின் ஒரு காரணமாக அமையலாம். அதனையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு முடி கொட்டுதலுக்கு மிக முக்கியமான காரணங்களை ஆராய்ந்து தெரிந்து கொண்ட பின் அதற்கான சிகிச்சை பெறுவது நல்லது.