Asianet News TamilAsianet News Tamil

விளக்கெண்ணெய் மலச்சிக்கலுக்கு பயன்படுத்துவாங்க... ஆனா தினமும் குடிக்கலாமா?

Castor Oil Health Benefits : தினமும் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் குடித்தால் நல்லது என சொல்வது உண்மையா? அதன் பின்னணி குறித்து இந்த பதிவில் காணலாம். 

what happens in your body if you consume castor oil in tamil mks
Author
First Published Aug 29, 2024, 9:58 AM IST | Last Updated Aug 29, 2024, 10:04 AM IST

விளக்கெண்ணெய் போல உடலுக்கு நன்மைகளை வழங்கக் கூடிய எண்ணெய் வேறு கிடையாது. உடல் சூட்டை குறைப்பது, செரிமானத்திற்கு உதவுவது என அதன் பயன்கள் ஏராளம். நம்முடைய முன்னோர் விளக்கெண்ணெய் பலன்களை நன்கு அறிந்தவர்கள். தலை முதல் பாதம் வரை விளக்கெண்ணெய்யை பயன்படுத்துவார்கள். 

தேங்காய் எண்ணெய் போல விளக்கெண்ணெய் வாசனையாக இருக்காது. இதற்கு ஆமணக்கு எண்ணெய் என்றும் ஒரு பெயருண்டு. ஆமணக்கு  விதைகளில் இருந்து பெறப்படும் இந்த எண்ணெய் தான், அழகுக்கு பெயர்போன கிளியோபாட்ராவின் சரும பளபளப்புக்கு காரணமாக இருந்துள்ளது. இது மட்டுமின்றி விளக்கெண்ணெய்யை அருந்துவது பல ஆரோக்கிய நன்மைகளை செய்வதாக சொல்லப்படுகிறது. இது உண்மையா? விளக்கெண்ணெய்யை குடிக்கலாமா? வாங்க தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க:  உடல் சூட்டில் இருந்து வாத பிரச்சனை வரை ஒரே தீர்வு "ஆமணக்கு எண்ணெய்"...'இதுக்கு' கூடவா இந்த எண்ணெய் யூஸ் ஆகுது!

மலச்சிக்கலுக்கு நிவாரணி : 
 
மலச்சிக்கலால் அவதிபடுவர்கள் இரவில் விளக்கெண்ணெய் அருந்திவிட்டு உறங்கலாம். விளக்கெண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் குடலில் உள்ள தசைகளை சுருங்க வைத்து மலத்தை வெளியேற்ற உதவுகிறது.   தொடர் மலச்சிக்கலால் ஆசனவாயில் புண்கள் ஏற்பட்டிருந்தால் அந்த இடத்தில் விளக்கெண்ணெய் தடவலாம். இது எரிச்சலை கட்டுப்படுத்தும். 

வயிறு சுத்தம் :

வயிறு சுத்தமாக குடல் சுத்தமாக இருக்க வேண்டும். உடலில் நச்சுக்கள் வெளியேறினால் தான் சருமம் பளபளப்பாக இருக்கும். வளர்சிதை மாற்றம் மேம்படும். இதற்கு விளக்கெண்ணெய் நல்ல தீர்வாக இருக்கும். விளக்கெண்ணெய்யில் உள்ள மலமிளக்கி பண்புகள் உடலின் நச்சு நீக்கி போல செயல்படுகின்றன. ஆனாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு   வயிற்று பிடிப்புகள், வயிறு உப்புசம் வரவும் வாய்ப்புள்ளது அதனால் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. 

சரும ஆரோக்கியம் : 

விளக்கெண்ணெய் சருமத்தை பளபளப்பாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்துவார்கள். ஆனால் இதனை நேரடியாக பயன்படுத்தக் கூடாது. இந்த எண்ணெய் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் மசாஜ் செய்யலாம். பின் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு கழுவலாம். சிலருக்கு இந்த எண்ணெய் பயன்படுத்துவதால் எரிச்சல், அரிப்பு வர வாய்ப்புள்ளது. முதலில் கைகளில்  அல்லது முகத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் பயன்படுத்தி சோதித்து பாருங்கள். 

கூந்தல் வளரும் : 

தலையில் உள்ள வறட்சி, பொடுகு காரணமாக முடி உதிர்வது ஆகியவற்றுக்கு விளக்கெண்ணெய் நல்ல தீர்வு. வாரம் ஒரு முறையாவது உங்கள் தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பின்  10 நிமிடங்கள் ஊறவிட்டு தலைக்கு குளித்தால் முடி உதிர்வு, பொடுகு தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கி முடியும் வளர்ச்சி அதிகமாகும்.

இதையும் படிங்க: Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?

விளக்கெண்ணெய் குடித்தால் என்னாகும்? 

  • மலச்சிக்கலுக்கு எளிமையான வீட்டு மருத்துவம் விளக்கெண்ணெய் குடித்துவிட்டு உறங்க செல்வதாகும். இரவில் விளக்கெண்ணெய் அருந்தினால் அது மலமிளக்கி போல செயல்பட்டு மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும்.  ஆனால் அளவுக்கு மீறி குடிக்கக் கூடாது. நீண்ட காலம் விளக்கெண்ணெய் அருந்துவது உடலுக்கு நல்லதல்ல என ஆய்வுகள் கூறுகின்றன. 
  • தொடர்ந்து விளக்கெண்ணெய் அருந்தினால் வயிறு கெட்டுப் போகும் வாய்ப்புள்ளது.  வயிற்று பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, நீரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் வரலாம். சிலருக்கு விளக்கெண்ணெய் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதனால் எப்போதாவது ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளலாமே தவிர தினமும் குடிக்கக் கூடாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios