நீங்கள் தினமும் ஏசி ரூமில் 8 மணி நேரம் இருக்கிறீர்கள் என்றால், அதனால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் குறித்து கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
முன்பெல்லாம் ஒரு தெருவுக்கு 5 அல்லது 10 வீடுகளில் தான் ஏசி இருக்கும். ஆனால் தற்போது அப்படி அல்ல. பலரது வீடுகளில் ஏசி வந்துவிட்டது. இது தவிர வேலை பார்க்கும் இடத்தில் கூட முழு நேரமும் ஏசி தான் இருக்கும். இப்படி நாம் பல மணி நேரம் ஏசியில் இருந்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் :
- நீர்ச்சத்து குறைபாடு :
ஏசியில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால் காற்றில் இருக்கும் ஈரப்பதம் முழுமையாக நீங்கிவிடும். இதனால் உடலிலும் நீர்ச்சத்து குறைந்துவிடும். எனவே ஏசியில் நீண்ட நேரம் இருப்பவர்கள் அவ்வப்போது தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சருமம் வறண்டு போய்விடும், கண்களில் எரிச்சல் ஏற்படும். சில சமயங்களில் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படும்.
2. சளி :
அதிக நேரம் ஏசியில் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் சளி, தலைவலி மற்றும் பிற நோய்கள் வரும்.
3. சுவாசக் கோளாறு ;
ஏசி அடிக்கடி சுத்தம் செய்யாமல் அதிக நேரம் இருந்தால் அதில் இருந்தால் ஏசியில் படிந்திருக்கும் தூசிகள் கரணமாக சுவாசக் கோளாறு உள்ளிட்ட மூச்சு பிரச்சனைகள் ஏற்படும்.
4. தசை பிரச்சினை :
ஏசி அல்லது சாதாரணமாக ஒரேயிடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் தசை பிரச்சனை ஏற்படும். தசைப் பிடிப்பு உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் உருவாகும்.
5. அதிகப்படியான சோர்வு :
நீண்ட நேரம் குளிரான ஒரே சூழலில் இருந்தால் அதிகப்படியான சோர்வு அல்லது மந்தமான மனநிலை உருவாகும்.
6. வேறு சூழலை ஏற்க முடியாத நிலை :
ஏசியில் அதிக நேரம் வேலை பார்க்கும் போது அதற்கு ஏற்ப உங்களது உடலும் பழகிவிடும். பிறகு அலுவலகத்தை விட்டு அல்லது வீட்டை விட்டு வெளியே வரும்போது அந்த சூழலை உங்களது உடல் ஏற்க மிகவும் சிரமமாக இருக்கும்.
ஏசியை பயன்படுத்த சரியான முறை :
- ஏசியில் நீங்கள் அதிக நேரம் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
- மாதத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக ஏசியை சுத்தம் செய்ய வேண்டும்.
- ஏசியை மிகவும் குளிரூட்டும் வகையில் வைத்திருக்கக் கூடாது.
- சில சமயங்களில் ஏசியால் சரும வறட்சியாகலாம். எனவே அதை தடுக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்.
