Asianet News TamilAsianet News Tamil

மாதவிடாய் நாட்களில் பெண்கள் இறைவனை வழிபடலாமா.. ஆன்மிகமும் அறிவியலும்!

இறைவனை வணங்குவதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை என்பது போன்றே மாதவிடாய் காலங்களிலும் இறைவனை வணங்கலாமா. என்னால் கடவுளை வணங்காமல் எப்படி இருக்க முடியும் என்று கேட்பவர்களுக்கான கட்டுரை இது.
 

what happens if we do pooja during periods,
Author
First Published Sep 30, 2022, 3:33 PM IST

பெண் கடவுள்களை மனமார வேண்டுகிறோம். நோன்பு இருக்கிறோம். லஷ்மி தேவி., மாகாளி,. மகமாயி. துர்க்கை, சரஸ்வதி என்று பெயரிட்டு அடைக்கலம் அடைகிறோம்.  அப்படி  பெண் தெய்வங்களை வணங்கும் நாம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியன்று மட்டும் தீட்டு என்று ஒதுக்கிவைத்துவிடுகிறோம். பெண் தெய்வங்களை போற்றும் நாம் பெண்களை விலக்கி வைக்கலாமா? 

பிரம்மசாஸ்திரத்தில் பெண்கள் தெய்வத்துக்கு ஒப்பானவர்கள் என்று சொல்லியுள்ளது. ஆனால் இந்து மரபுப்படி மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் தூய்மையறவர்களாக பார்க்க படுகிறார்கள். அன்றைய நாட்களில் மாதவிலக்கு முடியும் வரை அவர்கள் வீட்டில் இயல்பாக புழங்கவோ பூஜையறைக்கு நுழையவோ  ஆலயத்துக்கு செல்லவோ தடைவிதிக்கப்படுகிறார்கள். 

கெட்டவனான துரியோதனனுக்கும் கோயில் உண்டாம் தெரியுமா?

இதற்கு வேதக்கதை ஒன்று உண்டு.  பிரம்மஹத்தி சாபம் பெற்ற இந்திரன் தனது சாபம் நீங்க ஒவ்வொரிடமும் சாபத்தை பகிர்ந்து இறுதியாக பெண்களை அடைந்தான். பெண்களுக்கு சாபத்தை கொடுத்த தனது பழைய உருவத்தை பெற்றான். அந்த சாபம் தான் பெண்களுக்கு வெளிவரும் மாதவிலக்கு என்றும் சொல்வதுண்டு.

சமஸ்கிருதத்தில் இது பகிஷ்டை என்று சொல்வார்கள். அதாவது வெளியில் வை. விலக்கி வை என்று பொருள் தோஷம் பெற்ற பெண்களை இந்நாட்களில் விலக்கி வை என்று பொருள். தோஷம் வாங்கி பெண் அந்நாளில் தோஷத்துக்குரியவள் ஆகிறாள்.  இவையெல்லாம் ஆன்மிகம். 

அனைத்து வீடுகளிலும் காமாட்சி விளக்கு இருக்கும் காரணம் தெரியுமா?

அதுவே நம் முன்னோர்கள் சொல்லியபடி பார்த்தால் பெண்கள் அந்த மூன்று நாட்களில் உடலளவிலும் மனதளவிலும் பலவீனமாக இருப்பார்கள். அதனால் அவர்களை சுற்றி எதிர்மறை சக்திகள் தூண்டப்படும். இது அவர்களை பலவீனமாக்கும்.  இந்த நேரத்தில் கோவிலுக்குள் சென்றால் உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றலானது கோயில் வியாபித்திருக்கும் அதீத சக்தியை தாங்கும் நிலையில் இருக்காது.  அதிலும் முனீஸ்வர் ஆலயங்கள் நெருப்புத்தன்மை கொண்டவை அதனால் மாதவிடாய் நாள் பெண்களை பாதித்து அதிக உதிரபோக்கை உண்டு செய்யும். பெரும்பாலும் இந்த தெய்வங்கள் ஊருக்கு வெளியே தனியாக அமைந்திருக்கும். பெரும்பாலும் காடுகள் மலைகளை சுற்றி இருக்கும். அந்த இடங்களில்  இருக்கும் விலங்குகளுக்கு இந்த உதிரபோக்கு வாடை உணரும் தன்மை உண்டு. விலங்குகள் ஆக்ரோஷம் கொள்ளும். அபசகுணமாக இருக்கும். 

அதனால் பெண்கள் மாதவிலக்கு சமயத்தில் ஒதுங்கி இருக்க சொன்னார்கள்.இந்தச் சூழ்நிலையில் நீங்கள் நல்லதை நினைத்து வழிபடலாம். உங்களுக்குப் பி டித்த கடவுளை பிடித்த முறையி ல் தொ ட்டு பூஜை செய்ய முடியவில்லையென்றாலும் மனதால் அவரது நாமத்தை ஜபியுங்கள். இதை யா ரும் தடுக்க முடியாது.  மனதை அமைதியான முறையில் இறைவனி டம் செ லுத்துங்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios