இந்த 7 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இந்த மாதம் முதல், மிகவும் அமோகமாக இருக்கும்.

வாழ்க்கையில் அன்பை பெறுவது மிகவும் முக்கியமானது. அதேபோல் நல்ல துணையைப் பெறுபவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில், சிலர் ஒரு துணையைப் பெறுவதற்காக பல நாட்களாக காத்திருக்கிறார்கள். அதன்படி, இந்த மாதம் சில ராசிக்காரர்களின் இந்தக் காத்திருப்பு முடிவுக்கு வரப்போகிறது. ஜோதிடத்தின் படி, இந்த 7 ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை, இந்த மாதம் துவங்கி மிகவும் சிறப்பாக இருக்கும். அதேபோல், இந்த மாதம் சில ராசிகாரர்கள் திருமணமும் செய்து கொள்ளலாம்.

இந்த மாதத்தின் அதிர்ஷ்ட ராசிகள் இவை:

மேஷம்: 

இதுவரை தனிமையில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த் மாதம் காதல் துணையின் பிரவேசம் நிகழப்போகிறது. அதே சமயம் ஏற்கனவே காதல் வயப்பட்டவர்கள் இந்த மாதம் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணமான தம்பதிகளுக்கும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு முன்னெப்போதையும் விட வலுவாக இருக்கும், அதே போல் பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

மிதுனம்:

மிதுனம் புதன் கிரகத்தை ராசி நாதனாக கொண்ட மிதுனம் ராசிக்கார்கள் நேர்மையாக காதலை வெளிப்படுத்துவார்கள். தாங்கள் காதலிக்கும் நபர்களும் அதே நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள்.

 ரிஷபம்: 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, காதல் கைகூடும் திருமணம் கண்டிப்பாக நடைபெற்று விடும். அவர்கள் வாழ்க்கையில் காதல் எதிர்பாராத விதமாக நுழையும். காதலித்தவரை திருமணம் செய்துக்கொள்வீற்கள்.

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கைக்கு, இந்த மாதம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. காதல் நிரம்பிய சண்டை தொடரும், காதல் மலரும். திருமணத்தில் தடைகளை சந்தித்து வந்த தம்பதிகள் இந்த பிரச்சனையில் இருந்து விலகுவார்கள். திருமணமான தம்பதிகளுக்கும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஒரு மறக்கமுடியாத பயணம் செல்வீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு காதல் உயிர் மூச்சு. நரம்பின் நாயகன் புதன் ஆட்சி, உச்சம் பெற்ற ராசியான கன்னி ராசிக்காரர்கள், நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொல்லி விட்டால் அதற்காக தங்களின் வாழ்க்கையையே தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்

மகரம்: 

மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த ஆண்டு காதல் துணை வரலாம். இவர்களுக்கு இந்த மாதம் திருமணம் ஆகிவிடும். இந்த ராசிக்காரர்கள் ஆண்டு முழுவதும் தங்கள் துணையை கவனித்துக் கொள்வார்கள். அதே சமயம் திருமணத்தில் தடைகள் இருந்தவர்களும் இப்போது நீங்கிவிடும்.

கும்பம்:

கும்பம் கும்பம் ராசிக்காரர்களின் மனதில் ஆழமான காதல் இருக்கும். சனியை ஆதிக்க நாயகனாக கொண்ட இவர்களின் மனதில் காதலை வெளிப்படுத்த அச்சப்படுவார்கள். ஆழமான காதலோடு, உங்களை கைவிடாமல் எப்போதும் உறுதியாக செயல்படுத்துவர்கள்.