தினந்தோறும் முட்டை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு குறைந்து வருவதாக ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

எல்லோருக்கும் பிடித்தமான சாப்பிடக் கூடிய ஒன்று முட்டை. இதனை வறுவல் செய்தோ, ஆம்லெட்டாகவோ, ஆஃப் பாய்லாகவும், சிலர் அவித்தும் சாப்பிடுவது வழக்கம். முட்டையில் புரோட்டீன் சத்து அதிகளவில் நிறைந்துள்ளதால், ஜிம்மிற்கு செல்பவர்கள் கூட தினந்தோறும் சாப்பிட்டு வருவார்கள். முட்டையில் வைட்டமின் பி, சி, ஏ, டி, இ ஆகிய வைட்டமின்களும் உள்ளன. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான பாஸ்பரஸ் சத்து முட்டையில் அதிகளவிலேயே நிறைந்துள்ளது.

  1. தினந்தோறும் ஒரு முட்டை வீதம் சாப்பிட்டு வர என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம். 
  2. முட்டையில் கலோரி குறைந்தளவே இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. அதனால், தொப்பை உள்ளவர்கள் தினந்தோறும் கூட எடுத்துக் கொள்ளலாம்.
  3. நாள்தோறும் ஒரு முட்டை எடுத்துக் கொண்டால், பசியை குறைக்கும். இதன் மூலம் உடல் எடையும் குறையும்.
  4. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் ஒரு முட்டை வீதம் சாப்பிட்டு வர இதய நோய் பாதிப்பு வெகுவாக குறையும் என்று ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது.
  5. முட்டையை தனியாக சாப்பிடும் போது உடலுக்கு தேவையான சத்து கிடைக்கிறது. அதோடு, உடல் எடையும் குறைக்கப்படுகிறது. 
  6. உடலில் கொழுப்பு அதிகம் சேராமல் கரைக்க முட்டை சிறந்த உணவுப் பொருளாக பயபடுகிறது.