பயணித்த தூரத்திற்கு மட்டுமே இனி  சுங்க கட்டணம் செலுத்தும் முறையை மத்திய அரசு அமல் செய்ய  உள்ளது

நாடு முழுவதும் உள்ள தேசிய  நெடுஞ்சாலைகளில், கட்டுமானம்  மற்றும்  பராமரிப்புக்காக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.முதலீடு மற்றும் தூரத்தின் அடிப்படையில் இந்த  சுங்கக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

இந்நிலையில்,பயணிக்கும் தூரத்தை மட்டும் கணக்கிட்டு,அதற்கான சுங்கக் கட்டணத்தை மட்டும்  வசூலிக்கும் முறையை டெல்லி மும்பை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சோதனை  அடிப்படையில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு  முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதாவது டெல்லி மும்பை இடையே இயக்கப்படும்  சில ட்ரக்குகளில், இது போன்ற கட்டண முறையை நடைமுறைப்படுத்தும் அதற்கான  சாதனத்தை  தற்போது  உருவாக்கப்பட்டு உள்ளது

பின்னர் கணக்கிலிருந்து,எத்தனை கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்து உள்ளார்கள் என்பதை  கணக்கிட்டு அதற்கான கட்டணத்தை கொடுத்தால் போதுமானது

ஒரு ஆண்டு காலத்திற்கு இந்த முறை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி, பின்னர் நிரந்தரமாக பயன்படுத்தும் முறையை மேற்கொள்ள உள்ளனர்

இந்த முறை வெற்றி பெரும் தருவாயில், நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இந்த முறை கொண்டுவரப்பட உள்ளது.

அவ்வாறு இந்த முறை அமல் படுத்திவிட்டால் இனி யாரும் டோல்கேட்டில் வரிசையில்  நிற்க வேண்டிய அவசியம் இல்லை.