திருப்பதி சென்று வந்தாலேவாழ்வில் மாபெரும் திருப்பம் உண்டாகும் என்பது ஐதீகம்.

அதனால் தான், உலகில் உள்ள மாபெரும் மனிதர்கள் குறிப்பாக பணக்கார வர்கத்தினர் முதல் சாதாரண மக்கள் வரை திருப்திக்கு சென்று வருவர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,திருப்திக்கு செல்ல ஸ்பெஷல் நாட்கள் இருக்கு.அது பற்றி பணவளக்கலை என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

வரும் ஏப்ரல் 16  திருப்பதி சென்றால்,...

ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை திருப்பதி சென்றால்,நம் வாழ்வில் அனைத்தும் ஐஸ்வர்யம் தானாம்.

7 மலையை ஏறி இறங்கும் போது, நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்னை இறங்கு முகமாகிவிடும். நம் வாழ்வோ மேலோங்கி செல்லுமாம்

7 மலை

7 மலையும் சூட்சமான கிரகங்களுடன் சம்மந்தப்பட்டது. நாம் ஒவ்வொரு மலையும் ஏறி இறங்கும் போது தோஷம் பாவங்கள் நீங்கி விடும்...

திருப்பதி வெங்கடாசலமும்,மகா லட்சுமியும் சர்வ ஐஸ்வர்யம் தருவார் பத்மாவதி தாயார் வாழ்வில் அனைத்து வசதியும் தருவார்....

தமிழ் புத்தாண்டு

ஏப்ரல் 14 ஆம் தேதி சனிக்கிழமை தமிழ் வருட பிறப்பு.16 ஆம் தேதி தமிழ் புத்தாண்டின், முதல் திங்கட்கிழமை வருகிறது.இந்த தினத்தில் திருப்பதி சென்று,காலை நேர வழிபாட்டில் ஈடுபட்டால்..பின்னர் வாழ்வில் நாம் உயரும் பாதையை நாமே அறிவோம் என்பது ஐதீகம்.

அன்றைய தினம் திருப்பதிக்கு தான் செல்ல வேண்டுமா என்றால்,பதில் இல்லை என்பதே...திருப்பதிக்கு சென்றால் நல்லது.ஆனால் முடியாத நிலையில்,அவரவர் தம் வீட்டு அருகில் உள்ள,வெங்கடேச பெருமாளை வழிபட்டாலே போதுமானது...அனைத்து ஐஸ்வர்யமும் நமக்கு கிடைக்கும்.