we should not do re touching the model
மாடல்களை 'ரீ டச்சிங்' செய்தீங்க....37,500 யூரோக்கள் அபராதம்...அமலுக்கு வந்தது புதிய சட்டம் ...
மாடல்களின் புகைப்படங்களை மேலும் மெருகேற்றிக் காட்ட 'ரீ டச்சிங்' எனச் சொல்லப்படும் யுக்தி கையாளப்படுவது ரகசியமான விஷயமொன்றும் அல்ல. மாடல்களின் உடலில் சில பாகங்களை மெலிவாக்கவும், சிலவற்றை வளைவாக்கவும்,மாடல்கள் அணிந்த உடைக்கு ஏற்றவாறு கால்களின் நீளத்தை சரிசெய்யவும், கண்களை விரிவாக்கவும் புகைப்படங்களில் 'ரீ டச்சிங்' எனும் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
பிரான்ஸ் நாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், வணிகநோக்கில் பயன்படுத்தப்படும் எந்த புகைப்படத்திலும் அதில் உள்ள மாடல்களை ஒல்லியாகக் காட்டும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றங்களைச் செய்திருந்தால் 'இந்தப் படம் எடிட் செய்யப்பட்டிருக்கிறது' என சிகரெட் பாக்கெட்டில் உள்ள எச்சரிக்கைகளைப் போல குறிப்பிட வேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டுள்ளது
இந்த விதியை யாரெல்லாம் மீறுகிறார்களோ அவர்களுக்கு 37,500 யூரோக்கள் அல்லது அந்த விளம்பரத்தை எடுப்பதற்கு செலவிடப்பட்ட தொகையில் 30% அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
